விவசாய கற்கை நெறிப்பிரிவினரால் வேளாண்மையின் அறுவடை விழா



பாறுக் ஷிஹான்-
க்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியின் விவசாய கற்கை நெறிப்பிரிவினரால் கல்லூரி வளாகத்தில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மையின் அறுவடை விழா கல்லூரியின் பதில் அதிபர் எம்.எம்.ஹசனின் தலைமையில், கல்லூரியின் பதிவாளர் எம்.ஏ.சி.எம்.றகீப்பின் பிரசன்னத்துடன் நேற்று (8) வெகு விமர்சையாக நடைபெற்றது.

இவ்விழாவில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. எம்.எம்.சித்தி பாத்திமா அவர்கள் கலந்து கொண்டு நெல் அறுவடையை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வில்கல்லூரியின் வர்த்தக் பிரிவுத்தலைவர் எம்.எஸ்.எம்.றாபி, தகவல், தொழில் நுட்ப போதனாசிரியர் எம்.பி.எம்.சிராஜ், விவசாய கற்கை நெறியின் புறப்போதனாசிரியர் எம்.ஐ.எம்.நசீர், விவசாயத் திணைக்களத்தின் ஓய்வு நிலை கிழக்கு மாகாணப் பணிப்பாளரும், கல்லூரியின் முன்னாள் விவசாய கற்கை நெறியின் புறப்போதனாசிரியருமான வை.பி .இக்பால் போன்றோரும் கலந்து கொண்டு நெல் அறுவடையை மேற் கொண்டதுடன், விவசாய கற்கை நெறியின் விடுகை மாணவ, மாணவிகளும், புதிய மாணவ,மாணவிகளும், கைதேர்ந்த விவசாயிகளும் கலந்து கொண்டு அறுவடையை மேற் கொண்டதுடன், மாணவர்களால் விவசாயப் பாட நெறி தொடர்பாக விளக்கங்களும் அளிக்கப்பட்டன.























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :