சென் ஜோன்டில்லரி பகுதிக்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரின் சேவைக்கு இடையூறு


எஸ்.சதீஸ்-

நேர்வூட் சென் ஜோன்டில்லரி பிரதேச பாடசாலையில் 28.08.2023 திங்கட்கிழமைஇரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்ட போது சென் ஜோன்டில்லரி பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்க முன்பாக பெற்றோர்கள் ஆர்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்த போது சென் ஜோன்டில்லரி தமிழ் வித்தியாலயத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்யுமாறு கோறி கடிதமொன்றினை பெற்றோர்கள் பாடசாலையின் அதிபரிடம் சமர்ப்பித்ததை செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் இலங்கை பொலிஸ் தலைமையகத்தில் ஒன்லைன் ஊடாக இன்றைய தினம் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹட்டன் கல்வி வலயம் கோட்டம் இரண்டிற்கு உற்பட்ட நோர்வூட் சென்ஜோன்டில்லரி பிரதேச பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் 8 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் எதிர்வரும் 4ம்திகதி வரை விலக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது. கடந்த 22ம் திகதி பாடசாலை ஒன்றில் தரம் 05 மாணவர்களுக்கு மேலதிக வகுப்பினை நடாத்திக் கொண்டிருந்த வேலை குறித்த ஆசிரியர் நோர்வூட் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

8 வயது மாணவிக்கு சுகயீனம் காரணமாக மாணவயின் பெற்றோர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர் வைத்தியசாலையில் அனுமதித்த மாணவியை வைத்தியர்கள் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்ட போது குறித்த மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலையினூடாக நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் 06 மாதத்திற்கு முன்பு இடம்பெற்றதாகவும் 8 வயது மாணவி கடந்த 03 மாதத்திற்கு முன்பு நோர்வூட் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்ததுடன் தரம் 04 வகுப்பிற்கு டிக்கோயா பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதே வேளை அதே பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் இம்மாதம் 21ம் திகதி சட்ட விரோத மாணிக்கக்கல் அகழ்விற்காக 13 வயதுடைய மாணவன் ஒருவனை அழைத்துச் சென்ற வேளை குறித்த மாணவனை காணவில்லை என நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் சிறுவனின் பெற்றோர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்த வேளை குறித்த ஆசிரியர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு கடந்த 23ம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிசார் குறிப்பிட்டனர்.

இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாமலிருக்க கல்வி அமைச்சர் மற்றும்கல்வி இராஜாங்க அமைச்சர் கல்வி அதிகாரிகள் ஆகியோர் இணைந்து இந்த ஆசிரியர்களுக்கான ஒழுக்காற்று நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பெற்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :