அமைச்சர் நஷீர் அஹமட் அவர்களது உடல் நலம் சீராக பிரார்த்திப்போம்!



சுற்றாடல் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நஷீர் அஹமட் அவர்கள் தனது வழமையான மருத்துவ பரிசோதனையினை மேற்கொண்டிருந்த வேளை இதயக் குழாய்களில் ஏற்பட்ட அடைப்பு வைத்தியர்களால் கண்டறியப்பட்டு உடனடியாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளுமாறு வழங்கப்பட்ட வைத்திய ஆலோசனைக்கு அமைவாக,

இந்தியா சென்ற அமைச்சர் அவர்கள் சென்னையில் உள்ள அப்பலோ தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையினை தொடர்ந்து வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது,

13ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் முஸ்லிம்களது காணிப்பிரச்சனைகள் தொடர்பில் தனது நிலைப்பாட்டை முஸ்லிம் சமூகத்தின் சார்பிலே வெளிப்படையாகவும் தைரியமாகவும் தெரிவித்து வரும் நிலையில் தற்போது சென்னையில் உள்ள அப்பலோ தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் நஷீர் அஹமட் அவர்களது விரைவான உடல் நலத்திற்காகவும் , ஆரோக்கியத்திற்காகவும், அவரது அரசியல், சமூக பணிகள் இன்னும் வீரியத்துடன் முன்னெடுக்கப்படவும் உளமாற பிரார்த்திக்கிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :