கணக்கியல் பேராசிரியரானார் கலாநிதி எம். சி. எம். நாசர்



தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் கணக்கியல் பிரிவின் சிரேஷ்ட முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி எம். சி. எம். நாசர் அவர்கள் 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் தொழிற்படும் வண்ணம் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் கணக்கியல் துறையின் கணக்கியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் தனது விஷேட இளமானி பட்டத்தை பூர்த்தி செய்த இவர் அங்கு உதவி விரிவுரையாளராக நியமனம் பெற்று சிறப்பாக சேவையாற்றினார்.

பின்னர் 2003 ஆண்டு தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் தகுதிகான் விரிவுரையாளராக இணைந்து கொண்ட இவர் தனது முதுநிலை கற்கை நெறியான வியாபார நிருவாகமானி (Master in Business Administration) யை இலங்கையின் வயம்ப பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்து முதுநிலை விரிவுரையாளர் தரம்- II மற்றும் முதுநிலை விரிவுரையாளர் தரம் - I ஆகிய பதவிகளில் பதவி உயர்வுகள் பெற்றார்.

தனது கலாநிதி கற்கை நெறியான Doctor of Philosophy in Accounting கற்கை நெறியை மலேசியாவின் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகமான மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் திறம்பட நிறைவு செய்தார்.

பல்கலைக்கழக மட்டத்தில் பல்வேறுபட்ட துறைகளில் விசேட சேவையாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும் அதிலும் குறிப்பாக Senior Student Counsellor, Students Counsellor மற்றும் பிரதான இணைப்பாளர் வெளிவாரி கற்கைகள் மற்றும் தொழில் கற்கைகள் திணைக்களம் ஆகிய பதவிகளிலும் தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளிலும் இவர் திறம்பட செயலாற்றிய மை குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வதேச மற்றும் தேசிய மட்டத்தில் பல்வேறுபட்ட ஆராய்ச்சி மாநாடுகளில் பங்கேற்றத்துடன் பல்வேறுபட்ட ஆய்வு கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளதுடன் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் கணக்கியல் துறையில் அளப்பரிய பங்காற்றி தன்னிடம் கற்று மாணவர்களை உயரிய நிலைக்கு இட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கதாகும்.


மேலும் தனது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை தாண்டி ஊக்கமூட்டும் பேச்சாளராக (Motivational Speaker) தன்னை தேசிய மட்டத்தில் அடையாளப்படுத்தி பல்வேறுபட்ட பாடசாலை மற்றும் திணைக்களங்கள் ரீதியான பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனுபவங்களும் சிறப்பும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :