நிந்தவூர் கோட்ட மட்ட விளையாட்டு போட்டியில் நிந்தவூர் அல் அதான் வித்தியாலயம் வரலாற்று சாதனை



அஸ்ஹர் இப்றாஹிம்-
நிந்தவூர் கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் விளையாட்டுப் போட்டி நிந்தவூர் அல் அறபா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் நிந்தவூர் அல் அதான் வித்தியாலய மாணவர்கள் தரம் 3 ஆண்கள் பிரிவில், தரம் 5ஆண்கள் பிரிவில், தரம் 4 பெண்கள் பிரிவில், தரம் 5 பெண்கள் பிரிவில் முதலாம் இடங்களையும், ,தரம் 4 ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தினையும் பெற்று சாதனை புரிந்துள்ளது.

இவ்வெற்றிக்கு பல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலையின் அதிபர் ஏ.ஸி.எம்.முபீத், விளையாட்டுப் பொறுப்பாசிரியர் எஸ்.ஐ.நஜிமுல், மாணவர்களை சிறப்பாக பயிற்றுவித்த பாடசாலையின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ரீ.எம்.றிஸ்னி, மாணவர்களை போட்டிக்கு அழைத்துச் சென்று வழிப்படுத்திய ஏ.எஸ்.எம்.ஜெஸீம், திருமதி.என்.நுஸ்கியா, திருமதி.ஜே.ஜுமானா ஹஸீன் மற்றும் வெற்றியீட்டிய மாணவர்கள் அனைவருக்கும் பாடசாலை கல்வி சமூகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :