கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், கல்முனை சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவரும் , Former wakf tribunal member and former commissioner of Legal Aid commission of Srilanka,, சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜும் ஆப் பெரிய பள்ளிவாசல் முன்னாள் தலைவருமான சாய்ந்தமருதைச் சேர்ந்த சட்டத்தரணி அல்ஹாஜ் எம்.ஸீ.ஏ.அஸீஸ் இன்று(2) தெஹிவலையில் காலமானார்.
மர்ஹூம் எம்.ஸீ.ஏ.அஸீஸ் அவர்கள் சிறப்பாக ஓவியம் வரையக்கூடியவர். கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் 1977ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்விப் பொதுத்தராதர பரீட்சை ( NCGE ) பரீட்சைக்காக தொழில்நுட்ப பாடமான வானொலி தொழில் நுட்பத்தை சிறப்பாக மாணவர்களுக்கு செயன்முறைகள் மூலம் கற்பித்து நூறு வீதமான பரீட்சை பெறுபேறுகளை பெறுவதற்கு காரணமாக அமைந்துள்ளார்.
0 comments :
Post a Comment