இவர் வியாபார நிர்வாக இளமானி பட்டத்தை (BBA) முதல் தர வகுப்பு சிறப்பு சித்தியை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும் முகாமைத்துவ துறையில் முதுமானி பட்டத்தை (MSc. Management) ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்திலும் முனைவர் பட்டத்தை (PhD) மலேசியாவின் MSU பல்கலைக்கழகத்திலும் பூர்த்தி செய்துள்ளார்.
அத்துடன் உயர்கல்வி ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சி நெறியை கொழும்பு பல்கலைக்கழகத்திலும், உளவளத் துணை உயர் டிப்ளமோ பாடநெறியை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும் பூர்த்தி செய்துள்ளார்.
முகாமைத்துவம் மற்றும் வியாபாரக் கற்கை துறையில் 20 வருடங்களுக்கு மேற்பட்ட விரிவுரை அனுபவத்தை கொண்டிருப்பதுடன், இப் பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவின் பணிப்பாளராக ஆறு வருடங்கள் சேவையாற்றியும் உள்ளார்.
முகாமைத்துவம், முயற்சியான்மை மற்றும் வணிகக் கற்கைகள் தொடர்பாக 60 க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை தேசிய மற்றும் சர்வதேச ஆய் வரங்குகளில் பங்கு பற்றி சமர்ப்பித்துள்ளதுடன் 100 க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை தேசிய, சர்வதேச கல்விசார் சஞ்சிகைகளில் பிரசித்துள்ளார்.
குறிப்பாக பெண்கள் முயற்சியான்மை வலுவூட்டல் திட்டங்களை பிராந்திய ரீதியாகவும் மற்றும் தேசிய சர்வதேச ரீதியாகவும் முன்னெடுத்து சென்றுள்ளதுடன் குறிப்பாக முஸ்லிம் பெண்களின் முயற்சியான்மை விருத்திக்கு பல முன் ஏற்பாடுகளை ஆய்வு ரீதியாக வெளிக்கொணர்ந்து சமூக, பிராந்திய, தேசிய பங்களிப்புகளுக்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
தமது விரிவுரைகளுக்கு மேலதிகமாக இப்ப பல்கலைக்கழகத்தின் ஊழியர் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளராக தற்போது கடமை ஆற்றுக் கொண்டிருக்கின்றார். இவர் சம்மாந்துறை அல் மர்ஜான் மகளிர் தேசிய கல்லூரியின் பழைய மாணவியும் ஆவார்.
சம்மாந்துறையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், மர்ஹூம் ஏ.எல்.அப்துல் காதர் மற்றும் ஈ.எல்.ஆசியா ஆகியோருக்குக் கிடைத்த எட்டு பெண்பிள்ளைகளில் ஆறாவது பிள்ளையாவார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் Senior Staff Management Assistant எம்.ஐ அப்துல் ஜலீல் அவர்களை மணந்து இவர்களுக்கு ஏ.ஜெ.பாத்திமா ஹfப்னா என்ற மகளும் ஏ.ஜெ. ஹம்தி அகமட் என்ற மகனும் உள்ளது குறிப்பிடத்ததக்கது.
0 comments :
Post a Comment