திருகோணமலையில் பௌத்த பிக்குகளினால் ஆர்ப்பாட்டம்



அபு அலா -
திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த பிக்குகள் மற்றும் சில பொதுமக்கள் (28) காலை தொடக்கம் மதியம்வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஏ6 பிரதான வீதியை வழிமறித்து கிழக்கு ஆளுநருக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறும், பதாதைகளை ஏந்தியவாறு ஈடுபட்டனர்.

இன்றையதினம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இடம்பெற்றுவந்த நிலையில் இது தொடர்பாகவும் பேசப்பட்டது.

குறித்த பகுதியில் விகாரை அமைப்பதற்கு எதிராக தமிழ் மக்களினால் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஜனாதிபதியினால் அப்பகுதியில் அமைக்கப்பட்ட விகாரையின் கட்டுமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே இதற்கு எதிரான ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

காலாகாலமாக தமிழ் மக்கள் வாழுகின்ற பகுதிக்குள் விகாரை அமைத்தால் அது இன முறுகலை ஏற்படுத்தும் என்ற வகையிலும், இன நல்லிணக்கத்தை பாதிக்கும் என்ற வகையிலும் தமிழ் மக்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :