இராணவன் தமிழன் என்பதற்கும் சிங்களவன் என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை -மௌலவி முபாறக் அப்துல் மஜீத்



பாறுக் ஷிஹான்-
டந்த காலங்களில் நாங்கள் இராவணன் இராமன் தொடர்பில் பல்வேறு விடயங்களை தெளிவாக கூறி வருகின்றோம் .இராவணன் என்பவர் இலங்கையை ஆண்ட மன்னனாக இருக்கலாம்.ஆனால் இராவணன் தமிழன் என்பதற்கும் சிங்களவன் என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்பதை தான் சொல்லி வருகின்றேன்.காரணம் இராவணனுடைய ஆட்சி அல்லது இராமாயணம் என்பது தொல்லியல் மூலம் நிரூபிக்க முடியாத ஒரு வரலாறாகவே காணப்படுகிறது. இராமாயண கதையில் வருகின்ற பிரதான கதாபாத்திரங்களின் பெயர்களையும் முஸ்லீம்களின் பெயர்களையும் வைத்து பார்க்கின்ற போது ஒரு நபிக்கும் ஒரு முஸ்லீம் மன்னனுக்கும் இடையில் இடம்பெற்ற பிணக்கு காரணமாக இவ்வாறான பிரச்சினைகள் தோன்றி இருக்கலாம் .வருகின்ற கதாபாத்திரங்கள் இராவணன் இராமன் சீதை இலக்குவனன் வாலி சுக்கீரிவன் போன்ற பெயர்களை பார்க்கின்ற போது அது அரபு மொழிக்கு மிகவும் நெருக்கமான இருக்கின்ற முஸ்லீம்களுடைய பெயர்களை போன்று இருக்கின்ற காரணம் என்ன என்று ஆராய வேண்டும் என ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அலுவலகத்தில் பாராளுமன்றத்தில் அண்மையில் இராமாயணம் தொடர்பில் விவாதம் இடம்பெற்றமை தொடர்பில் இன்று(15) விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

பாராளுமன்றத்தில் அண்மையில் ஒரு விவாதம் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.இராவணன்.தமிழில் இராவணன்.சிங்களத்தில் இராவண என்று சொல்வார்கள்.இந்த இராவணன் என்பவர் யார்?இந்த இராவணன் தமிழனா? சிங்களவனா என்று விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.உண்மையில் இந்த விடயம் பாராளுமன்றத்தில் விவாதிக்கக் கூடிய விடயமல்ல.படித்த மக்கள் வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் இவ்விடயம் விவாதிக்கப்பட வேண்டிய விடயமாகும்.ஆனால் இவ்விடயம் 100 க்கு 70 வீதம் படிக்காதவர்கள் பட்டதாரிகளாக இல்லாதவர்கள் இருக்கின்ற பாராளுமன்றத்தில் விவாதிப்பது என்பது ஒரு அதிசயமாகவும் ஒரு அருவருக்கத்தக்க விடயமாகவும் நாம் பார்க்கின்றோம்.

கடந்த காலங்களில் நாங்கள் இராவணன் இராமன் தொடர்பில் பல்வேறு விடயங்களை தெளிவாக கூறி வருகின்றோம்.2013 ஆண்டு இவ்வாறு தெளிவாக தெரிவித்துள்ளேன் என நினைக்கின்றேன்.இது தவிர 2020 ஆண்டு பொதுத்தேர்தல் காலப்பகுதியிலும் இவ்விடயம் குறித்து சொல்லி இருக்கின்றோம்.இராவணன் என்பவர் இலங்கையை ஆண்ட மன்னனாக இருக்கலாம்.ஆனால் இராணவன் தமிழன் என்பதற்கும் சிங்களவன் என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்பதை தான் சொல்லி வருகின்றேன்.காரணம் இராவணனுடைய ஆட்சி அல்லது இராமாயணம் என்பது தொல்லியல் மூலம் நிரூபிக்க முடியாத ஒரு வரலாறாகவே காணப்படுகிறது.இவ்விடயம் கிட்டத்தட்ட 7000 வருடங்களுக்கு முற்பட்டது என கூறுகின்றார்கள்.கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் கிட்டத்தட்ட 25000 வருடங்களுக்கு முற்பட்டது என கூறி இருந்ததை காண்கின்றோம். ஆகவே இராமாயணம் என்பது ஒரு புராணக்கதை.இந்த புராணக் கதை சமஸ்கிரத மொழியில் எழுதப்பட்டிருந்தது.அது தமிழிலோ அல்லது சிங்களத்திலோ எழுதப்பட்ட புராணக் கதை அல்ல.புராணக் கதை எனும் போது அதில் கற்பனைகளும் இருக்கலாம் உண்மைகளும் இருக்கலாம்.இவ்விடயம் ஒரு சிறிய சம்பவம் .ஆனால் மிகைப்படுத்தபட்ட ஒரு புராணக் கதை என்பதே எமது கருத்தாக உள்ளது.

ஆனால்நாங்கள் கேட்கின்ற கேள்வி என்னவெனில் அந்த புராணக் கதையில் வருகின்ற கதாபாத்திரங்கள் தமிழர் பெயர்களாகவோ அல்லது சிங்களவர் பெயர்களாகவோ அல்லது சமஸ்கிரத மொழி பேசுகின்றவர்களின் பெயர்களாகவோ இல்லாமல் அரபு மொழிக்கு நெருக்கமான இருக்கின்ற காரணம் என்ன என்ற கேள்வியை நாம் பலகாலமாக கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றோம் .இந்த கேள்விக்கு பதில் தராமல் பலரும் எங்களுடைய கருத்தை நையாண்டி செய்வதை தான் நாம் பார்க்கின்றோம்.நாங்கள் இன்னும் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றோம்.இந்த கதைகளில் வருகின்ற கதாபாத்திரங்கள் இராவணன் இராமன் சீதை இலக்குவனன் வாலி சுக்கீரிவன் போன்ற பெயர்களை பார்க்கின்ற போது அது அரபு மொழிக்கு மிகவும் நெருக்கமான இருக்கின்ற முஸ்லீம்களுடைய பெயர்களை போன்று இருக்கின்ற காரணம் என்ன என்று ஆராய வேண்டும்.

இதில் இராமன்-ரஹ்மான் இராவன் -இராவணன் சீதா -சைதா நுஃமான் -அனுமான் என்பது ஒரு மொழியில் தான் வருகின்றது.ஏன் இவ்வாறு வருகின்றது என்பதை ஆராயும் போது இது முஸ்லீம்களின் ஒரு சிறிய வரலாறு தான் என்பதுடன் பின்னர் அது கற்பனையாக புராணக் கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தான் எங்களுக்கு ஏற்பட்ட தெளிவான கருத்தாக உள்ளது.இராமாயணம் 7000 வருடங்களுக்கு முந்தியது எனும் போது அது எப்படி முஸ்லீம்களின் வரலாறாக முடியும் என்பது சிலருக்கு ஆச்சரியமளிக்கலாம்.இஸ்லாமியர்களின் வரலாறு என்பது 1400 ஆண்டு கால வரலாறு தான் என்பதை சிலர் கேட்க கூடும்.இது உண்மையில் இஸ்லாம் பற்றி தெரியாதவர்களின் கருத்தாகவே நாம் கருதுகின்றோம்.இஸ்லாத்தின் வரலாறு என்பது 1400 வருடமல்ல.இந்த உலகத்தில் முதல் மனிதன் ஆதம் என்பவரை நாங்கள் நபி என்கின்றோம்.இந்த உலகத்தில் ஆதம் எப்போது இறங்கினாரோ அல்லது கால் வைத்தாரோ அன்று முதல் இஸ்லாமும் முஸ்லீம்களும் இந்த உலகில் வாழ்கின்றனர் என்பதை ஹதீஸ் குர்ஆன் என்பன மிக தெளிவான கருத்தாக கூறுகின்றன.

நாங்கள் நபி இப்றாகீம் அவர்களை முஸ்லீம் என்கின்றோம்.நபி இப்றாகீம் வரலாறு என்பது இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முற்பட்டது என்பதை வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.எனவே அவ்வாறாயின் இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முற்பட்டது தான் இஸ்லாமிய வரலாறு என்பதை நாம் காண்கின்றோம்.அதே போன்று நூஹ் நபி அவர்களின் வரலாற்றை சாதாரணமாக கணிப்பின் ஊடாக ஆராய்ந்தால் கிட்டத்தட்ட 1 இலட்சம் ஆண்டு வாழ்க்கை வரலாறாக தெரிவிக்கப்படுகின்றது.ஆகவே இவ்வாறான விடயங்களை வைத்து பார்க்கின்ற போது இஸ்லாம் என்பது முதல் மனிதன் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை இஸ்லாமிய வரலாறாக இருந்து கொண்டே இருக்கின்றது.முஹம்மது நபி அவர்கள் இஸ்லாத்தினை கொண்டு வரவில்லை.இஸ்லாத்தை புதுப்பிக்க வந்தவர்கள் தான் எங்களது தூதர் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்.அவர் இறுதி நபியாக தான் இவ்வுலகத்திற்கு வருகை தந்தார்கள்.இஸ்லாத்தை புதுப்பிக்க வருகை தந்தவர்களே தவிர இஸ்லாத்தை அவர்கள் கொண்டு வரவில்லை.இப்றாகீம் நபியினுடைய வழியில் தான் இருக்கின்றென் என்பதை எங்களது தூதர் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களே கூறி இருக்கின்றார்கள் என்பதை நாம் காண்கின்றோம்.

இவ்வாறு எல்லாம் பார்க்கின்ற போது இந்த இராமாயண கதையில் வருகின்ற பிரதான கதாபாத்திரங்களின் பெயர்களையும் முஸ்லீம்களின் பெயர்களையும் வைத்து பார்க்கின்ற போது எங்கயோ ஒரு இடத்தில் நாம் சொல்கின்ற காரணம் எவராலும் மறுக்க முடியாத விடயமாகவே உள்ளது.இந்த காரணத்தை நாம் கூறுகின்ற போது அதாவது ஒரு நபிக்கும் ஒரு முஸ்லீம் மன்னனுக்கும் இடையில் இடம்பெற்ற பிணக்கு காரணமாக இவ்வாறான பிரச்சினைகள் தோன்றி இருக்கலாம்.என்ற கருத்தை கூட நாம் கூறி இருக்கின்றோம்.உதாரணமாக இராவணன் எனும் பெயருக்கு நாம் அனைவரும் அறிந்த எகிப்து நாட்டு மன்னன் ராவுன் அல்லது பிர்அவ்ன் எனும் பெயர் ஏன் இங்கு வந்தது என்ற வினா எழுகின்றது.அதாவது இலங்கையில் இராமாயண புராணக்கதை இடம்பெற்றிருந்தால் அங்கு இருந்த மன்னனுக்கு ஏன் சிங்கள பெயராகவோ அல்லது தமிழ் பெயராகவோ இல்லாமல் எகிப்திலே இருந்த மன்னனுடைய பெயர் பிரவுன் என்பது போன்று ஏன் இராவனை அழைக்க வேண்டும்.என்ற கேள்வியை நாம் கேட்க விரும்புகின்றோம்.


இந்த கேள்விக்கு எவரும் பதில் தர முன்வருவதில்லை.உண்மையில் இந்த விடயத்தை பாராளுமன்றத்தில் பேசுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர சிவஞானம் சிறிதரன் ஆகியோர் நாங்கள் பாராளுமன்றத்தில் இல்லாவிடினும் எமக்கு பதில் அளிக்க முன்வாருங்கள்.ஏன் இந்த புராணக்கதையில் வருகின்ற கதாபாத்திரங்களின் பெயர்கள் முஸ்லீம் பெயர்கள் போன்று இருக்கின்றன. இதற்கான காரணம் என்ன?நீங்கள் தெளிவு படுத்த வேண்டும்.அவ்வாறு இவ்விடயத்தை தெளிவு படுத்த முடியவில்லை எனின் நாங்கள் சொல்கின்ற முஸ்லீம்களின் சம்பவத்தை கற்பனையாக வடிவமைத்து இராமாயணமாக உருவாக்கி உள்ளார்கள் என்பதே எமது கருத்தாக உள்ளது என்பதை நாங்கள் தெளிவு படுத்த விரும்புகின்றோம்.இதை விட பாராளுமன்றத்தில் விவாதங்களில் கலந்து கொள்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இலங்கையின் வரலாறு சிங்கள தமிழ் மக்களது வரலாறு மிக சரியாக தெரியாது என்பது எமது கருத்தாகும்.

மகாவம்சத்தில் சிங்களவர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த இளவரசன் விஜயன் மூலம் உருவானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.2700 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயன் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அவர்களது வரலாறு சான்று பகிர்கின்றது.அவ்வாறாயின் இராவணன் ஆட்சி என்பது 2700 க்கு உட்பட்டதா என்றால் இல்லை என்றே சொல்ல முடியும்.அவ்வாறாயின் இராவணனை எப்படி சிங்களவர் என்று கூறுவீர்கள்.அதே போன்று தமிழ் மொழிக்குரிய வரலாறு என்று பார்க்கின்ற போது வரலாற்று ஆசிரியர்களின் குறிப்பின் படி 5000 ஆண்டுகளாகும்.அதே போன்று எழுத்துருவில் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் என்றும் தமிழர் வரலாற்றை கூறுகின்றார்கள்.ஆனால் அந்த காலத்தில் கூட தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்ததாக எந்தவொரு வரலாற்று ரீதியான ஆதாரம் எதுவுமில்லை.மாறாக இளவரசன் விஜயன் தனது 700 கூட்டாளிகளுடன் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் போது அந்த 700 பேருக்கும் மனைவிகள் இல்லாத சூழ்நிலையில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் இளவரசிகளும் அவர்களது தோழிகளும் இலங்கைக்கு வந்து மணம் முடித்துள்ளதாக வரலாறு கூறுகின்றது.

இதை நாங்கள் சொல்லவில்லை.வரலாறு தான் கூறுகின்றது.அவ்வாறாயின் விஜயனின் வருகையின் பின்னர் தான் தமிழ் மக்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக காண்கின்றோம்.இந்த வரலாறுகளை கூறி இனங்களுக்கிடையே மோதல்களை உருவாக்காமல் நீங்களும் நாங்களும் கணவன் மனைவிமார் அல்லது சிங்களவர் தமிழர்களும் சம்பந்திமார் என கூறி ஒற்றுமையாக இருப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் முயற்சிக்க வேண்டும்.இராவணன் சிங்களவனா தமிழனா அல்லது இந்த நாடு சொந்தம் என்ற வாத பிரதி வாதங்களை தவிர்த்து கொண்டு இன ஒற்றுமைக்காக பாடுபட முன்வர வேண்டும்.உண்மையில் தமிழர் சிங்களவர் சம்பந்திகள் தான்.அன்றும் சம்பந்திகள் தான் இன்றும் கூட சம்பந்திகள் தான் இருக்கின்றார்கள்.இன்றும் கூட திருமணங்கள் இவர்கள் மத்தியில் இடம்பெற்று கொண்டு தான் உள்ளது.சிலர் தங்களது அரசியலக்காக மக்கள் மத்தியில் தங்களது வாக்குகளை பாதுகாக்க பாராளுமன்றத்தில் உசுப்பேத்தகின்றார்கள். எனவே உண்மையான வரலாற்றை சொல்லுங்கள் .ஒரு தொல்லியல் ஆய்வு ஊடாகவோ அல்லது வரலாற்று ஆசிரியர் ஊடாகவோ பேசுங்கள்.அவ்வாறு இல்லாமல் மக்களை ஊசுப்பேத்த பேச வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :