கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட வலய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை (தேசிய பாடசாலை) விளையாட்டு மைதானத்தில் கடந்த 2023 ஜுலை மாதம் 24,25ம் திகதிகளில் நடைபெற்றது.
இவ் விளையாட்டுப் போட்டியில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) தரம் 06ம் பிரிவு மாணவிகள் பங்குபற்றி வெற்றியீட்டியதுடன் மாகாணமட்ட போட்டி நிகழ்ச்சிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
12வயதுக்கு கீழ்ப்பட்ட 100 மீற்றர் பெண்களுக்கான
ஓட்டப்போட்டியில் எஸ்.எச். அஸ்ரிபா முதலாம் இடத்தையும், 4 X 60 மீற்றர் அஞ்சலோட்டத்தில் ஜெ.எப். சைனப் ,எம்.எப். இஸ்மா, எஸ்.எச்.அஸ்ரிபா, எம்.என்.எப். இமா ஆகியோர் முதலாம் இடங்களையும், 18வயதுக்கு கீழ்ப்பட்ட பெண்களுக்கான குண்டு போடுதலில் எ.எப். ஹிபா இரண்டாம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகளை உற்சாகமளிக்கும் நோக்குடன் குறித்த மாணவிகளை அதிபர் அலுவலகத்துக்கு அழைத்து கல்லூரியின் முதல்வர் யூ.எல்.எம். அமீன் அவர்களால் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
கல்முனை வலய விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை திறம்படவழிப்படுத்திய உடற்கல்வி பாட ஆசிரியர்களான எம்.ஆர்.எம். றப்கான், எம்.ஜ. ரஃபீக்கா பீவி (தரம் - 07 பகுதித் தலைவி), எம்.எம். றிசான், ஆர்.எம். அஸ்மி, எம்.ஜ. சாமிலா (தரம் - 08 பகுதித் தலைவி) ஆகியோரும் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான ஹாஜியானி. சமதா மசூது லெவ்வை,
உதவி அதிபர்களான எம்.எஸ். மனுனா, என்.டி. நதீகா மற்றும் உடற்கல்வி பாட ஆசிரியர் எம்.ஆர்.எம். றப்கான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment