அம்பாறை மாவட்ட அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத் உலமா சபையின் ஒன்று கூடல் கடந்த 30/07/2023 ஞாயிறு மு.ப 9.30 மணியளவில் அட்டாளைச்சேனையில் யு.எல்.அம்ஜத் அலி (பாஸில்,சகாபி) மௌலவியின் இல்லத்தில் நடந்தது.
இரு அமர்வுகளாக இடம்பெற்ற இந்த ஒன்று கூடலில் அம்பாறை மாவட்டத்தின் பல ஊர்களைச் சேர்ந்த கனிசமான உலமாக்கள் கலந்து கொண்டனர்.
அதன் முதலாம் அமர்வில் சபையின் முன்னாள் தலைவராக செயல்பட்ட மௌலவி றபீயுத்தீன் (ஜமாலி) கடந்த 30/06/2023 ம் திகதி வெளியிட்ட தனது நூலில் பதிவிட்டு இருந்த சில தெளிவற்ற விஷயங்கள் தொடர்பாகவும் மற்றும் மற்றொரு நூலான குறித்த மௌலவியினால் வெளியிடப்பட்ட 'எல்லாம் நீயே. நீ இன்றி வேறில்லையே " எனும் நூல் தொடர்பாகவும் சினேகபூர்வமாக கலந்துரையாடப்பபட்டது.
இரண்டாம் அமர்வு விஷேட கூட்டமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அவ்விஷேட கூட்டத்தில் மேற்படி கலந்துரையாடலில் பெறப்பட்ட தீர்மானங்களுக்கு ஏற்ப மௌலவி ரபியுத்தீன் ஜமாலி 'வஹ்ததுல் வுஜுத்" (எல்லாம் அவனே) என்ற கோட்பாடு தொடர்பில் இஸ்லாமிய ஷரிஅத்திக்கு முற்றிலும் முரணான கருத்துக்களையும் தனது நிலைப்பாடு பற்றி தனக்கு தெளிவில்லாத போக்கையும் கொண்டுள்ளார். என்ற காரணத்தை இட்டு தனது தலைமை பொறுப்பில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.
அதன் பின்னர் பொதுச் சபை ஒன்று கூடும் வரை சபையின் தற்காலிக தலைவராக கல்முனையைச் சேர்ந்த மௌலவி அல்ஹாஜ் பி.எம்.ஏ.ஜலீல் (பாகவி) ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார். பின்னர் விசேட கூட்டம் 12 மணி அளவில் யா நபி பைத் சலவாத்துடன் நிறைவுற்றது.
0 comments :
Post a Comment