கலாசார அலுவல்கள் அமைச்சினால் வருடம் தோறும் நடாத்தப்பட்டு வரும் பிரதீபா - 2023 போட்டியின் ஓர் அங்கமான கிழக்கு மாகாண மட்டப் போட்டிகள் மட்டக்களப்பு பிள்ளையாரடி மகா வித்தியாலயத்தில் கடந்த சனிக்கிழமை (12) இடம்பெற்றது.
இந்தப் போட்டிகளில் சுமார் 15 க்கு மேற்பட்ட மத்திய நிலையங்கள் பங்குபற்றியிருந்தன. அதில் முஸ்லிம் பிரிவில் சுமார் 07 மத்திய நிலையங்கள் கலந்து கொண்டன.
இந்த மாகாண மட்டப் போட்டிகளில் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையம் முதல் முறையாகக் கலந்து கொண்டு சிரேஷ்ட நிகழ்ச்சியான கோலாட்டம் போட்டியில் முதலிடத்தையும், கனிஷ்ட பிரிவு நிகழ்ச்சியான ரபான் கோலாட்டம் நிகழ்வில் இரண்டாம் இடத்தின்யும் பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
போட்டியிலும் கலந்துகொண்டது. இந்த இரண்டு பிரிவுகளில் கோலாட்டம் சிரேஷ்ட நிகழ்ச்சியில் 83 புள்ளிகளைப் பெற்று சாய்ந்தமருது வரலாற்றில் முதலாவதாகக் கலந்து கொண்ட போட்டியிலேயே முதல் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு சாய்ந்தமருதுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வரலாற்றுச் சாதனை படைந்துள்ளனர்.
இப்போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மற்றும் சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய மாணவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments :
Post a Comment