கல்விச் சுற்றுலாவின் ஒரு அங்கமாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அக்கரைப்பற்று முனவ்வரா கனிஸ்ட கல்லூரி மாணவர்களுக்கு பொலிஸாரால் எதிர்பாராத விதமாக கெளரவம் வழங்கப்பட்டது.
கல்விச் சுற்றுலாக்களின் போது மாணவர்களை பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதில் ஆசிரியர்கள் அவ்வளவு அக்கரை செலுத்துவதில்லை. இருந்தும் எந்தவிதமான அச்சமும் இன்றி பொலிஸ் நிலையம் பார்க்கச் சென்ற மாணவர்களை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.எஸ்.பி.விஜயதுங்க மற்றும் நிலையத்திலிருந்த பொலிஸ் அதிகாரிகள் மாணவர்களையும் அழைத்துச் சென்ற ஆசிரியர்களையும் அன்புடன் வரவேற்று, பொலிஸ் நிலைய நடவடிக்கைகளை மாணவர்களுக்கு காண்பித்தனர்.
இந்நிகழ்வின் போது பொலிஸ் உத்தியோஸ்தர்களான முஹம்மட் அனீஸ் மற்றும் தாஹிர் ஆகியோர் உடனிருந்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உதவி புரிந்தனர்.
0 comments :
Post a Comment