கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/சபீனா முஸ்லிம் வித்தியாலத்தில் ஆசிரியரகளாக சேவையாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களான ஏ ஆர்.ஏ.றஷீட் மற்றும் திருமதி ஜெ. இஸ்மாலெவ்வை ஆகியோரின் சேவையைப் பாராட்டுமுகமாக ஆசிரியர் நலன்புரிக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சேவை நலன் பாராட்டு நிகழ்வு இன்று பாடசாலையில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் சஹதுல் நஜீம் கொண்டதுடன் கௌரவ அதிதியாக காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜே. டேவிட் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஓய்வு பெறவுள்ள காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜே. டேவிட் அவர்கள் பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போத்தி நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டி கெளரவிக்கப்பட்டார். இந் நிகழ்வில் பாடசாலை பிரதியதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment