மீன் ஏற்றி வந்த லொறி குடைசாய்ந்ததில் இருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்


எப்.முபாரக்-


திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 87 ம் கட்டை பகுதியில் இன்று (30)காலை மீன் ஏற்றி வந்த லொறி குடைசாய்ந்ததில் இருவர் படுகாயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .

திருகோணமலை கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 48 மற்றும் 30 வயதுடைய இருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த லொறி நிலாவெளி பிரதேசத்திலிருந்து கந்தளாயிக்கு மீன் ஏற்றி வந்த போது 87 ஆம் கட்டைப் பகுதி வளைவில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்தில் வாகன சாரதியும் உதவியாளரும் படுகாயங்களுடன் கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை கந்தளாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :