பாணந்துறை, ஹொரேத்துடுவை முஸ்லிம் வித்தியாலயத்தின் சாதாரண தர பரீட்சை பெறுபேற்றினை அதிகரிக்கும் "சமர்" செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கடந்த சனிக்கிழமை (12.08.2023) மொறட்டுவை AQUA Pearl Lake Resort ல் பாடசாலையின் கௌரவ அதிபர் SH. முத்தலிப் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
"கற்றலுக்கான ஆளுமை விருத்தி" என்ற தலைப்பில் மாணவர்களுக்கான வெளியக பயிற்சி செயலமர்வும் இடம் பெற்றது.
செயலமர்வின் வளவாளராக, மகளிர்- சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின், முதியோர்களுக்கான தேசிய சபை மற்றும் தேசிய செயலகத்தின் சிரேஷ்ட உளவள ஆற்றுகைப்படுத்துனர் AM. அஸ்ரின் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகளை வழங்கினார். நிகழ்வின் இறுதியில் மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் இன்றைய நாள் நிகழ்வில் "பாடசாலை சூழல் பாதுகாப்பு கழகம்" ஸ்தாபிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment