அம்பாறை மாவட்ட செயலக பிரதம பொறியியலாளராக பதவியுயர்வு பெற்றுச்செல்லும் கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளர் ஏ.எம். ஸாஹிர் அவர்களை பாராட்டி வழி அனுப்பும் நிகழ்வு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமை உரையையும், சேவை நலன் உரையை நிகழ்த்தியதுடன், கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான பீ.ஜிஹானா ஆலிப், திட்டமிடல் பிரதிக்கல்விப்பணிப்பாளர் என். வரணியா ஆகியோர்களினாலும் சிறப்புரையும் நிகழ்த்தப்பட்டது. பிரதம பொறியியலாளர் எங்கு சென்றாலும் கல்விக்கான எனது சேவை என்றும் தொடரும் என்று தனது ஏற்புரையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் பிரதிக்கல்விப்பணிப்பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், நிருவாக உத்தியோகத்தர், வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment