திருகோணமலையில் பாடசாலை மாணவர்களுக்கு சுற்றுச் சூழல் பாதுகாப்பு செயலமர்வு



ஹஸ்பர்-
திருகோணமலை எகேட் கரித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் (கிழக்கிலங்கை மனித மேம்பாட்டு பொருளாதார நிறுவனம்) அனுசரணையுடன், திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் எனும் தொனிப் பொருளில் கடந்த (.09 ) தி/ஸ்ரீ மாதுமை அம்பாள் தமிழ் வித்தியாலயத்தில் சிறுவர்கள், இளையோர்களுக்கான சுற்றுச் சூழல் மற்றும் தனி நபர் சுகாதாரம் பற்றிய செயலமர்வு பணிப்பாளர் அருட்பணி.கலாநிதி.B.போல் றொபின்சன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இவ் நிகழ்வின் வளவாளர்களாக பொதுச் சுகாதார பரிசோதகர்களான .ச.ஷியாம் சுந்தரம், செ.உதய குமார் மற்றும் திருமதி.அ.நித்தியகலா ( PHI, PHM ) ஆகியோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிட்ட தக்கது. அத்துடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் உத்தியோகத்தர்களா திரு.G.A.பிரான்சிஸ், திரு.K.ரஜித், திரு.A.M.பிரசாத், திரு.A.D.பொனிபஸ், திரு.M.டினேஷ், ஆகியவர்களுடன் தி/ ஸ்ரீ மாதுமை அம்பாள் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் திரு.நா.இளங்கேஸ்வரன் ஆசிரியர்களும் சு 100 அதிகமான மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :