கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் ஒன்றுகூடல் 2023-08-27 ஆம் திகதி ஒன்றியத்தின் தலைமையத்தில் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். நஸீர் தலைமையில் இடம்பெற்றது. குறித்த ஒன்றுகூடளின்போதே மேற்படி துஆ பிராத்தனை இடம்பெற்றது.
மறைந்த உயர் கல்வி பிரதியமைச்சர் மையோன் முஸ்தபா அவர்களின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். கிழக்கு மாகாணத்தில் முதன் முதலாக கணனிக் கல்வியை அறிமுகம் செய்து கணனிப் புரட்சியை ஏற்படுத்தியவர். முஸ்லிம் சமூகம் மாத்திரமல்லாது ஏனைய சமூகங்களும் கணனிக் கல்வியைப் பெற வேண்டும் என்பதற்காக நாட்டின் பல பாகங்களிலும் கிளைகளை ஆரம்பித்தார்.
சிறந்த கொடை வள்ளலான இவர் பல ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார். சாய்ந்தமருதிலுள்ள ஒரு பள்ளிவாசலுக்கு இவரது பெயர் நாமம் சூட்டியே அழைக்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினராக பிரதி அமைச்சராக பல அளப்பரிய சேவைகளை ஆற்றினார். தனது கல்வி நிறுவனத்தின் பெயராகிய மையோன் என்ற பெயரைக் கொண்டே இறக்கும் வரை அழைக்கப்பட்டார். இவரது மறுமை வாழ்வு ஈடேற்றமுள்ளதாக அமைய கிழக்கு நட்புறவு ஒன்றியம் இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
கிழக்கு நட்புறவு ஒன்றியம்
சாய்ந்தமருது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment