இலங்கை ஆசிய மன்ற பூரண அனுசரணையில் சுமார் ஒன்றரை மில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை வாசிகசாலை மற்றும் மாணவர்களுக்கான கடந்த கால வினாப்பத்திரத் தொகுப்பு நூல்கள் இன்று (06) மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
ஆசிய மன்ற முன்னாள் நிகழ்ச்சித்திட்ட ஆலோசகரும், இலங்கை உள்ளூராட்சி மன்றங்கள் சம்மேளனம் மற்றும் சி.ஜி.ஐ. நிறுவனம் ஆகியவற்றின் நிகழ்ச்சித்திட்ட ஆலோசகருமான எம்.ஐ.எம்.வலீத் இலங்கை ஆசிய மன்றத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கமைய நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, கல்முனை தமிழ், சம்மாந்துறை கோட்டங்களைச் சேர்ந்த 16 பாடசாலைகளுக்கு இந்த நூல்கள் அவரின் தலைமையில் ஆசிய மன்ற புத்தகங்கள் நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் அன்டன் டீ நல்லதம்பியின் பிரசன்னத்துடன் பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், ஏனைய அதிதிகளாக கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்விப் பணிப்பாளரும், கோட்டக்கல்வி அதிகாரியுமான ஏ.பி.பாத்திமா நஸ்மியா சனூஸ், நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரி எம்.சரிபுதீன், காரைதீவு கோட்டக்கல்வி அதிகாரி ஜே.டேவிட், கல்முனை தமிழ்ப்பிரிவு கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.சரவணமுத்து , ஆசிய மன்ற திட்ட இணைப்பாளர் எம்.ஐ.ஜாவாஹிர், பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலைகளின் அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், ஆசிய மன்ற அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வினை கிழக்கு மாகாண சபையின் கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் உறுப்பினர் நூறுல் குதா உமர் சிறப்புற தொகுத்து வழங்கினார்.
0 comments :
Post a Comment