திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காட்டு யானையொன்று மர்மான முறையில் உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் குளத்தினை அண்டிய காட்டுப்பகுதியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியில் மாடு மேய்க்கச் சென்றவர்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய இனங்கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த காட்டு யானை பத்து வயது தொடக்கம் பதின்மூன்று வயது வரை இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காட்டு யானை இறந்துள்ளமை தொடர்பாக வனஜீவராசி அலுவலகத்திற்கு அறிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நோய் வாய்ப்பட்டு இறந்துள்ளதா அல்லது வேறு காரணங்களினால் காட்டு யானை இறந்துள்ளதா என்பது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment