ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனைத் தொகுதி செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (06) அல்பஹ்ரியா மகா வித்தியாலய மண்டபத்திலும் நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலித ரங்கே பண்டார , முன்னாள் அமைச்சர் தயா கமகே, முன்னாள் பிரதி அமைச்சர் அனோமா கமகே ,முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா, ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை மற்றும் சம்மாந்துறை தொகுதிகளுக்கான அதிகாரமளிக்கப்பட்ட முகவரும் (Authorized Agent for Kalmunai & Sammanthurai Electorates) கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம் நபார் , ஓய்வு பெற்ற அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்னாயக்க ,உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
மேலும் சம்மாந்துறை தொகுதி செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் சந்திப்பு கடந்த சனிக்கிழமை (05) அப்துல் மஜீட் மண்டபத்தில் ஆரம்பமாகி நிறைவடைந்திருந்தது.
இந்நிகழ்வுகளில் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது நாடு பூராகவும் கட்சி புணரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் சம்மாந்துறை மற்றும் கல்முனை தொகுதியிலும் கட்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க ஆலோசனையில் பிராந்தியத்தில் கட்சியை பலப்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் தற்போது ஐக்கிய தேசிய கட்சியில் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் கட்சிக்கான ஆதரவு கோரும் நடவடிக்கைகள் விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment