இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் பிரதேச செயலகம் தோறும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அனுசரனையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் நடாத்திய பிரதேச தொழில் சந்தை நேற்று புதன் கிழமை முழு நாளும் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மிலின் வழிகாட்டலில் பிரதி திட்ட பணிப்பாளர் எச்.எம்.றுவைத் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மாவட்ட மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கருணாகரன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கந்து கொண்டனர்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எல்.எம்.சிப்லியின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்ற பிரதேச தொழில் சந்தை நிகழ்வில் பதினைந்து மேற்பட்ட தொழில் நிறுவனங்களும் தொழில் பயிற்சி நிறுவனங்களும் கலந்து கொண்டதுடன் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் உள்ள அதிகமான இளைஞர் யுவதிகளுயும் பங்குபற்றினர்.
0 comments :
Post a Comment