ஓட்டமாவடியில் புத்தகக் கண்காட்சியும், மலிவு விற்பனையும்



எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டமாவடி தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் புத்தகக் கண்காட்சியும் மாபெரும் மலிவு விற்பனையும் வெள்ளிக்கிழமை (11) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - மருதானை தெமட்டகொட வீதியில் இயங்கி வரும் இஸ்லாமிக் புக் ஹவுஸ் ஏற்பாடு செய்துள்ள இவ் புத்தகக் கண்காட்சியும், மாபெரும் மலிவு விற்பனையும் ஞாயிற்றுக்கிழமை (13) ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனைக் கூடத்தை ஓட்டமாவடி தேசிய பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையிலான குழுவினர் உத்தியோபூர்வமாக திறந்து வைத்தனர்.

இதில், ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.அஸ்ரப், ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஏ.காதர், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்கள், அப்பியாசக் கொப்பிகள், இஸ்லாமிய புத்தகங்கள், கதைப் புத்தகங்கள் உட்பட பயனுள்ள நூல்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :