கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியின் கலை அமுது விழா



ண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியின் கலை அமுது விழா 2023 கண்டி இந்து கலாச்சாரம் மண்டபத்தில் மிகக் கோலாகலமாக இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், சிறப்பு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஸ்வரன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

இந்நிகழ்வில் தமிழ் கலை கலாச்சாரத்தை அடையாளப்படுத்தும் விதமாகவும் இலங்கையின் இனங்களுக்கடையிலான நல்லிணக்கணத்தை பறைசாற்றும் வகையில் பல கலை நிகழ்ச்சிகளும் கல்லூரி மாணவர்களினால் அரங்கேற்றப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் பாடசாலை மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவித்து பரிசீல்கள் வழங்கப்பட்டது.

இதன்போது, இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

பலர் அரசியலில் ஈடுபடுவதை சாக்கடை என்று கூறுகின்றார்கள் ஆனால் அதனை சுத்தம் செய்வதற்கு யாரும் வருவதில்லை. ஆனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று பரிணாமங்களுடன் விஸ்தரித்து பல இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சி நெறிகளை வழங்கி நாட்டின் கொள்கை தீர்மானத்தில் சந்தர்ப்பத்தையும் வழங்கி வருகிறோம்.

ஜனாதிபதி அவர்களுடன் மலையக மக்களின் அபிவிருத்திக்கான சந்திப்பு இடம்பெற்றது. ஆனால் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக பிரதிநிதிகள் இதனில் பங்கு கொள்ளாது தவிர்த்தனர்.

எமது மக்களின் அபிவிருத்திக்காக ஒன்றினையாது தமது அரசியல் நோக்கத்திற்காக எமது மக்களைப் பிரித்தாள நினைத்து இவர்கள் மட்டுமல்லாது எமது மக்களின் அபிலாசைகளையும் புறந்தள்ளி உள்ளார்கள்.

கண்டி புனித சில்வர்ஸ்டர் கல்லூரி இலங்கைக்கு இளம் தலைவர்களை உருவாக்குகின்றனர் இம்மகத்தான செயலில் நானும் இணைந்து கொள்வது பெரும் மகிழ்ச்சியாகும். இக்கல்லூரி கட்டிட வசதிகளையும் நவீன கற்றல் வசதிகளையும் எதிர்பார்த்து இருப்பதை நான் அறிந்தேன்..

அந்த வகையில் எனது அமைச்சின் நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி ஊடாக இக்கல்லூரிக்கு நவீன திறன் வகுப்பறை ஒன்றிணையும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கட்டிடத்தையும் வழங்க நான் தீர்மானித்துள்ளேன்.
இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ள இப் பாடசாலை வளர்ச்சியில் நாம் என்றும் முன் நின்று செயல்படுவோம். இன அடையாளம் எமது உரிமை சிலர் இதனை இனவாதமாக மாற்றுவதாலயே எமது நாடு இவ்வாறான பொருளாதார வீழ்ச்சியை அடைந்தது. இளம் மக்கள் பிரதிநிதிகளாக நாம் இதனை மாற்றி அமைப்போம். என்றும் நாங்கள் உங்களுடன் என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :