சிரேஷ்ட ஆசிரியை எஸ்.ஜெ.டீ. ஹரீட் தனது ஆசிரியர் சேவையினை 1993ம் ஆண்டிலிருந்து ஆரம்பித்து கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் சுமார் 28 ஆண்டுகள் சேவையாற்றியதுடன் 02 ஆண்டுகள் சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் ஆசிரியர் சேவையினை மேற்கொண்டுள்ளார்.
ஒய்வு பெற்ற சிரேஷ்ட ஆசிரியை எஸ்.ஜெ.டீ. ஹரீட் தனது ஆரம்ப கல்வியினை 03ம் தரத்திலிருந்து உயர் தரம் வரை இக்கல்லூரியில் கற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளமானி பட்டப்படிப்பினை பூர்த்தி செய்து தனது முதலாவது நியமனத்தை இக்கல்லூரியின் உயர் தர பிரிவுக்கான வணிகக் கல்வி ஆசிரியராக பொறுப்பேற்றார்.
சமூகக்கல்வி பாட ஆசிரியையாக, தேசிய கீதம், கல்லூரி கீதம், வரவேற்பு கீதம், கலை இலக்கியம், பாடல்கள் குழு, இசைக்குழு, இணைப்பாடவிதான செயற்பாடுகள், விளையாட்டு, இல்லக்குழு தலைவி போன்ற செயற்பாடுகளிலும் கல்லூரியின் வளர்ச்சி, அபிவிருத்தியில் தன்னுடைய முழுமையான அற்பணிப்புடன் சேவையாற்றியவர்.
நடப்பு ஆண்டுக்கான (2023) இல்ல விளையாட்டு போட்டியில் சம்பியன் வெற்றி பெற்ற (நிஸ்ரின் - சிவப்பு நிறம்) இல்ல பொறுப்பாசிரியராக இவரே
செயற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் அதிபர், பிரதி உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள் எஸ்.ஜெ.டீ. ஹரீட் ஆசிரியை பற்றிய நினைவு பெயர் உரை, கவிதைகள், பாடல்கள் கடந்து வந்த நினைவலைகள் சபையினர் மத்தியில் பகிர்ந்து கொண்டனர்.
ஆசிரியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நடை பெற்ற சேவை நலன் பாராட்டு விழாவினை சங்க தலைவா் அலியாா் றிபான் ஆசிரியர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். சிரேஷ்ட ஆசிரியை எஸ்.ஜெ.டீ. ஹரீட் ஆசிரியையின் மூன்று தசாப்த சேவையினை பாராட்டி கல்லூரி சார்பான நினைவு பரிசினை கல்லூரியின் முதல்வர் யூ.எல்.எம். அமீன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. தரம் 06 தொடக்கம் 13 வரையான பகுதித்தலைவர்கள் அதனுடன் தொடர்பான ஆசிரியர்கள் நினைவு பரிசில்கள் வழங்கி உளப்பூர்வமான கெளரவத்தை வழங்கினர்.
இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான ஹாஜியானி எஸ்.எஸ்.எம். சமதா மசூது லெவ்வை, உதவி அதிபர்களான ஏ.எச். நதீரா, எம்.எஸ். மனுனா, என்.டி. நதீகா, பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசாரா ஊழியார்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
"ஓய்வுக் காலம் சிறப்பாக அமைய பிரார்த்தனைகளும் வாழ்த்துக்கள்"
-ஊடக பிரிவு-
மஹ்மூத் மகளிர் கல்லூரி,
(தேசிய பாடசாலை),
கல்முனை.
0 comments :
Post a Comment