மட்டக்களப்பு - ஏறாவூர் மாக்கான் மாக்கார் பாடசாலையின் அதிபரின் இடமாற்றத்தை நிறுத்தக்கோரி அப் பாடசாலையின் மாணவர்கள் இன்று காலை முதல் பாடசாலையின் நுளைவாயிலை மூடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 06 மணியளவில் ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
ஆசிரியர்கள் பணியாளர்கள் ஆகியோரை பாடசாலையினுள் நுளைய அனுமதிக்காத மாணவர்கள் தமது கோரிக்கைக்கான தீர்வை பெற்றுதரக்கோரினர்.
இதே வேளை சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு மத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜே.எப் றிப்கா அவர்களும், மற்றும் பொலிஸார் மாணவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டதுடன்.
இதற்கான தீர்வை விரைவில் பெற்றுத்தருவதாக கூறியதையடுத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.
0 comments :
Post a Comment