அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சிறுவர் சித்திரப்போட்டி 2022 யில் சம்மாந்துறை வலயப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகாவித்தியாலயத்தில் இருந்து பங்குபற்றி வலய மட்டத்தில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா கல்லூரியின் அதிபர் ஏ.ஏ.அமீர் தலைமையில் நேற்று நடைபெற்றது.
விழாவில் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் சித்திரப்பாட இணைப்பாளர் எஸ்.எல் அப்துல் முனாப் மற்றும் சித்திர பாட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment