மொழியினூடாக எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது எழுத்தாணியின் செயற்பாடு



ஏ. எம்.இப்ராஹிம்-

திருகோணமலை மாவட்டமானது மூவின மக்களும் வாழும் இயற்கை சார்ந்த பிரதேசமாக காணப்படுகின்ற போதில் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், இவ்வாறான முக்கியத்துவத்தில் விளங்குவதோடு இன நல்லுறவினை கட்டியெழுப்பும் எழுத்தாணி அமைப்பினால் ஊடகவியலாளர் ஊடகவியலாளர்களுக்கான " மொழி அவசியம் என்னும் தொனிப் பொருளினோடு இன நல்லிணக்கமும்' சார்ந்து பயிற்சி இடம்பெற்றதனை காணலாம்.

எமது நாட்டைபொறுத்தவரை மொழி ஆனது மிகவும் அவசியமாக விளங்குகின்றது அது சகோதரத்துவ மொழியாக காணப்படுகின்ற போதிலும் அண்டா மொழி சிங்களம் இரண்டாம் மொழி தமிழ் என்று அடிப்படையில் காணப்படுகின்றது ஆகவே எழுத்தாணி நிறுவனமானது தேசிய மொழி கற்கை நிறுவனத்தின் அனுசரணையுடன் ஊடகவியலாளர்களுக்கான ஆறு மாத கால பயிற்சியினை நடைமுறைப்படுத்தி. சிங்களம், தமிழ் கற்பது திட்டங்களை எழுத்தாணி மற்றும் விருத்தி என்ற அமைப்பின் உதவியோடு கற்கை நரியினை சிறப்பான முறையில் ஆரம்பித்து வைத்தனர்.

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர்
கலாநிதி பிரசாத் கேரத் மற்றும் எழுத்தாணி நிறுவனத்தின் தலைவர் திரு ராஜ்குமார் அத்துடன் துறை சார்ந்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

எழுத்தாணி கலை பேரவையின் ஏற்பாட்டில் சகோதர இனமொழி ஊடகவியலாளர்களுக்கிடையில் இன நல்லுறவை ஏற்படுத்தும் சந்திப்பு மற்றும் களப்பயணம் இடம் பெற்றன.

அதில் பல்வேறு விடயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன அதில் கருத்து தெரிவிக்கும் சிங்கள சகோதர ஊடகவியலாளர் பின்வருமாறு கூறினார் மொழி ஊடாக எங்களுக்கு மிகவும் சந்தோஷமான இருந்தது இங்கு நல்லிணக்கம், சமத்துவம், சகோதரத்துவம், என்பனே இந்த மொழி மூலம் களம் அமைத்துக் கொடுத்தன. எனது தமிழ் பேசும் சகோதரன் வீட்டுக்கு சென்ற போது உண்மையான சந்தோசத்தினை நான் அடைந்தேன் அவர்களின் குடும்ப ரீதியான அரவணைப்புகள் என்னை கவர்ந்தது அவர்களின் விருந்தோம்பல் மற்றும் என்னுடைய கூச்ச உணர்வுகள் உங்க கலைந்தன இவ்வாறான தருணங்கள் இனியும் வாழ்வில் கிடைக்குமோ என்ற கேள்வியோடு விடைபெற்றேன்.

அதேபோன்று நானும் ஒரு தமிழ் பேசும் ஊடகவியலாளர் என்ற வகையில் உங்களை சகோதரியின் வீட்டுக்குச் சென்ற போது அவர்களின் அந்த வரவேற்பும் விருந்தோம்பல் பரிமாற்றமும் சிறப்பாக இருந்தன. என்பது ஒரு மனிதனின் உயிரைப் போன்றது இவற்றை கண்ணியப்படுத்த வேண்டிய ஒரு விடயமாக காணப்படுகின்றது
சிறந்த நல்லிணக்கத்தினை ஏற்படுத்தியது.

எனவே எழுத்தாணியின் இவ்வாறான ஊடகம் சார்ந்த மொழி ரீதியான சகோதரத்துவம் ஏனைய மாவட்டங்களுக்கும் முன்னுதாரணமாக அமைகின்றன அத்துடன் ஏற்படுகின்ற சிறிய சிறிய விடயங்களுக்கு இவ்வாறான மொழி சார்ந்த செயல்பாடுகள் சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்துவதற்கு ஒரு குறியீடாக விளங்குகின்றது.

அதேபோன்று சகோதர மொழி ஊடகவியலாளர்களை சந்திக்கும் வேலை திட்டத்தின் கலபயணம் கண்டி நோக்கிய பயணித்தன. எங்களை சகோதர மொழி சார்ந்து சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் காண்பதற்கு ஆவலாக இருந்தனர் பின்பு அங்கு சென்றவுடன் அவர்கள் எங்களை சிறந்த முறையில் வரவேற்றனர் அத்துடன் அவர்கள் தங்களைப் பற்றிய அறிமுகம் அவர்களின் ஊடக சார்ந்த அனுபவங்கள் மொழி சார்ந்த அனுபவங்களை எங்களுடன் சிறப்பான முறையில் பகிர்ந்து கொண்டனர் அத்துடன் பத்திரிகை சார்ந்து சிரேஷ்ட ஊடகவியலாளர்களும் காணப்பட்டனர்.

அங்கு ஊடகவியலாளர் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் மொழி ஊடாக பல்வேறு இன்னல்களை ஆரம்பத்தில் எதிர்கொண்டோம் அதன் பிற்பாடு இன்று அந்த மொழி எங்களுக்கு பயனுள்ளதாக மாறி நாங்கள் தலை நிமிர்ந்து நிற்கின்ற அளவுக்கு வழி வகுத்துள்ளன நாங்கள் மொழியை கண்டால் அஞ்சத் தேவையில்லை பல்வேறு விடயங்களை நாங்கள் சாதிக்க முடியும் இதனால் நாங்கள் பெருமை அடைகிறோம்.

அத்துடன் திருகோ ணமலையிலிருந்து சென்ற சகோதர ஊடகவியலாளர்களின் மொழி ரீதியான கலை உணர்வுகளும் அங்கு அரங்கேற்றப்பட்டன. இத்துடன் எழுத்தாணி நிறுவனத்தினால் நினைவுச் சின்னங்கள் சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இன்னும் ஒரு ஊடகவியலாளர் கருத்து தெரிவிக்கையில் எங்களின் இந்த களப்பயணமானது சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும். மதம் இனம் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் தப்பான முறையில் சந்தோசமான உணர்வுகளை ஏற்படுத்தியது அத்துடன் மதரீதியான நல்லிணக்கதினையும் ஏற்படுத்தியது மாத்தளை ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் அனுஷ்டான முறைகளை கண்டுகளித்தனர்.

மனதுக்கு மன நிறைவினை ஏற்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகள் எழுத்தாணியினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதனை விட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.

இவ்வாறான நல்லிணக்கம் மொழி சார்ந்த செயற்பாடுகளை ஏற்படுத்திய எழுத்தாணி கலை பேரவைக்கு கோடான நன்றிகள்!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :