தகவல் தொடர்பாடல் பயிற்சி மையம் ஏறாவூர் நகரசபையுடன் இணைந்து நடாத்தும் பாடசாலை மாணவர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகளுக்கான கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று (03) ஏறாவூர் நகரசபை மண்டபத்தில் நகரசபையின் செயலாளர் MHM.ஹமீம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் CCT அமைப்பின் திட்ட அலுவலர் திரு சில்வயன், ஏறாவூர் நகரசபை உத்தியோகத்தர் திருமதி அச்சலா சுகந்தினி, CCT அமைப்பின் உறுப்பினர்களான செல்வி அப்ரின், செல்வி அப்ரா, செல்வி பஸீரா, செல்வி சியானி, சமூக பிரதிநிதிகள், நகரசபை வட்டார உத்தியோகத்தர்கள், என. பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
ஏறாவூர் நகரசபை நிருவாகம் கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளில் எதிர் கொள்ளும் நடைமுறைச் சிக்கல், முறையான கழிவகற்றல், கழிவுகளைத் தரம் பிரித்தல், கழிவுகளை பாதுகாப்பாகக் கையாளுதல், கழிவுப் பொருட்களை பயன்படுத்தி வருமானம் ஈட்டுதல், சேதனைப்பசளை தயாரித்தல் தொடர்பாக விரிவுரையாளராக கலந்துகொண்ட கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஆலோசகர் திருவாளர் இளங்குமரன் அவர்கள் தெளிவுபடுத்தினார்.
0 comments :
Post a Comment