வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு திங்கட்கிழமை (31) இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.சீ.அப்துல் நாஸர் கலந்து கொண்டு மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டி வைத்தார்.
இந்நிகழ்வின்போது, சிரேஸ்ட விரிவுரையாளர் அப்துல் நாஸர் பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிரினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பாடசாலை பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மாணவத் தலைவர்கள் தங்களது கடமைகள் தொடர்பில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment