அவுஸ்திரேலியா பிரதிநிதி முன்னிலையில் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்கிய றோட்டரிக்கழகம்.



வி.ரி. சகாதேவராஜா-
ல்முனை ரொட்டரிக் கழகத்தின் 2023/2024 ஆண்டிற்கான தலைவர் ரொட்டேரியன் ஏஎல்ஏ. நாசர் தலைமையில் கல்முனை கல்வி மாவட்ட பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இவையாவும் அவுஸ்திரேலியா கன்பேரா வெஸ்டர்ன் கிறிக் ரொட்டரிக்கழகம் பிரதிநிதி ரொட்டேரியன் த.ரவீந்திரன் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டன.

இவ் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக நேற்று முன்தினம்(21.08.23 )மூன்று பாடசாலைகளுக்கு, திராய்க்கேணி அ.தி.மு.க.க பாடசாலை, கோளாவில் விநாயகர் வித்தியாலயம்,மற்றும் மாணிக்கமடு அதக பாடசாலை ஆகியவற்றிற்கு 155,000/ பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கான நிதியினை கன்பேரா வெஸ்டர்ன் கிறிக் ரொட்டரிக்கழகம் வழங்கியது.அக்கழகத்தின் அங்கத்தவரான ரொட்டேரியன் த.ரவீந்திரன் கலந்துகொண்டு அப்பியாசக்கொப்பிகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்விற்கு செயலாளர் ரொட்டேரியன் கே. குகதாசன், சமூக சேவைகள் பணிப்பாளர் ரொட்டேரியன் மு.சிவபாதசுந்தரம், ரொட்டேரியன் மா. சிதம்பரநாதன் மற்றும் உறுப்பினர் ரொட்டேரியன் என். றதீசன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.


பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது ஓர் வரப்பிரசாதமாகும் என நலன்விரும்பிகள் கருத்துரைத்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :