சம்மாந்துறை தொழினுட்ப கல்லூரியின் பரீட்சை அவலம்; பணிப்பாளர் நாயகம் மாணவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்தார்.



சம்மாந்துறை ஐ எல் எம் நாஸிம்-
ம்மாந்துறை தொழினுட்ப கல்லூரியில் இன்று (03) இடம் பெற இருந்த பரீட்சை சரியான நேரத்தில் இடம்பெறாததால் அவ் இடத்தில் மாணவர்கள் போரட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

சம்பவம் 1

சம்மாந்துறை தொழினுட்ப கல்லூரியின் முதலாம் ஆண்டு கட்டுமான தொழினுட்ப மாணவர்களுக்கு நேற்று (02) பரீட்சை ஆரம்பமாகியது.

நேற்று ஆரம்பமாகிய பரீட்சைக்கு மாணவர்கள் பரீட்சை அனுமதி அட்டையில் இடப்பட்டுள்ள இடமான சம்மாந்துறை தொழினுட்ப கல்லூரிக்கு வருகை தந்திருந்தனர் . பரீட்சை 9.00 மணிக்கு ஆரம்பிக்க நேரசுசியில் இடப்பட்டிருந்த போதிலும் பரீட்சையை 10 மணிக்கு ஆரம்பிக்கபட்டது.பரீட்சை முடிந்தவுடன் அதிபரை சந்திக்க வேண்டுமென தெரிவிக்கபட்டதோடு மாணவர்கள் ஒரு சிலர் சந்தித்தனர். அக் கல்லூரியின் அதிபர் நாளை நீங்கள் அனைவரும் அம்பாறை ஹாடிக்கு பரீட்சைக்கு சொல்லுமாறு கூறியிருந்தார் ஒன்றுமறியது திகைத்து நின்ற மாணவர்கள் சம்பவ தினமாக இன்று (03) காலை அம்பாறை ஹாடிக்கு சென்றனர். அங்கு சென்றவர்களுக்கு பரீட்சை எழுத முடியாத சூழ்நிலை உருவாகியது . (ஒழுங்குபடுத்தப்படவில்லை) அல்லோல கல்லோல பட்ட மாணவர்கள் மீண்டும் சம்மாந்துறை தொழினுட்ப கல்லூரிக்கு வருகை தந்தனர்.

சம்பவம் 2

சம்மாந்துறை தொழினுட்ப சிவில் இஞ்சினியரிங் இறுதி வருட மாணவர்களுக்கு பரீட்சை நிலையம் சம்மாந்துறை தொழினுட்ப கல்லூரி எனவும் பரீட்சை புதன் கிழமை (03) ஆரம்பிக்கப்படுமெனவும் பரீட்சை அனுமதி அட்டையில் கூறப்பட்டு இருந்தது .

மாணவர்கள் பரீட்சைக்கு தயாராகி சம்மாந்துறை தொழினுட்ப கல்லூரிக்கு வருகை தந்தனர்.பரீட்சையை அம்பாறை ஹாடி உயர் தொழினுட்ப கல்லூரியில் மாற்றியுள்ளதாக அதிபர் மாணவர்களிடம் தெரிவித்தார்.மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தினர்களுக்கும் பேச்சுவார்த்தை இடம் பெற்றது.

களத்திற்கு சம்மாந்துறை பொலிஸார் வருகை தந்திருந்தனர் .

இவ்வாறு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறையில் உள்ள நலன்விரும்பிகளின் காதுகளிலும் எட்டியது.

சம்பவம் தொடர்பாக பொறியியலாளர் பர்சாத்கான் அவர்களை மாணவர்கள் சந்தித்தாக தெரிவித்தனர்.

களத்திற்கு சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் எம் எஸ் எம் நாவஸ் மற்றும் சம்மாந்துறை நலன்விரும்பி ஏ.எல் எம் நிப்றாஸ் , பாஸித் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கல்லூரிக்கு வருகை தந்தனர்.

உயர் குழுக்களிடையே நீண்ட நேர கலந்துரையாடல் இடம்பெற்றது.

சம்மாந்துறை முன்னாள் பாராளுமன்ற எம் ஐ எம் மன்சூர் தொழினுட்ப கல்லூரியின் பணிப்பாளர் நாயகம் எம் சி ஜெகத் அவர்களை அவருடைய அலுவலகத்தில் வைத்து இன்று (03)சந்தித்தார்.

ஒரு சில நிமிடங்கள் கழித்து மாணவர்களின் கோரிக்கைகளுக்கு பணிப்பாளர் நாயகத்தினால் இருந்து ஒரு கடிதம் கிடைக்கப்பெற்றது.

கடிதத்தில் பரீட்சைகள் யாவும் சம்மாந்துறை தொழினுட்ப கல்லூரியில் இடம் பெறும் எனவும் இன்று (03) இடம்பெறாமல் இருந்த பரீட்சை வேறொரு தினத்தில் இடம் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இரண்டு வருட மாணவர்களும் சம்மாந்துறை தொழினுட்ப கல்லூரிக்கு முன்பாக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்த நிலையில் இச் சாதகமான முடிவுக்கு அமைய போராட்டம் கைவிடப்பட்டது.

மாணவர்கள் இதற்காக பக்க பலமாக இருந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தனர் .










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :