கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக கல்முனை பிராந்திய பாலியல் நோய்கள் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.என்.எம். தில்ஸான் அவர்களினால் அம்பாறை மாவட்ட எய்ட்ஸ் கமிட்டி கூட்டம் கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சார்பில் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.பீ அப்துல் வாஜித் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிநிதிகளும், கல்முனைப் பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம் சீ எம். மாஹீர் உள்ளிட்ட பிரிவுத்தலைவர்களும் பாலியல் நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர்வு பியூமி பெரேரா, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொலிஸாரும் ஏனைய அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்குபற்றினார்கள்.
குறித்த கூட்டத்தின் இறுதியில் நடைபெற்ற பல்தரப்பு கலந்துரையாடலின் போது பாடசாலை மட்டத்தில் நடைபெறுகின்ற பாலியல் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதுடன் பிராந்தியத்தில் காணப்படுகின்ற பாலியல் தொற்றுக்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதாகவும் போதுமான சட்ட நடவடிக்கைகளை நாடுவதாகவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
0 comments :
Post a Comment