கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி யூ. எல். றியால் பொறுப்பேற்றார் !



மாளிகைக்காடு நிருபர்-
ல்முனை கல்வி வலய, கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாக கல்முனை கல்வி வலயத்தின் தமிழ் பாட உதவிக்கல்வி பணிப்பாளர் யூ.எல். றியால் இன்று (28) கல்முனை கோட்டக்கல்வி பணிமனையில் வைத்து முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி ஏ.பி.எப். நஸ்மியா சனூஸ் அவர்களிடமிருந்து தமது கடமைகளை பெறுப்பேற்று கொண்டார்.

கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், வலயக்கல்வி அலுவலக கணக்காளர் வை. ஹபிபுல்லாஹ், பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள் முன்னிலையில் யூ.எல். றியால் தனது கடமைகளை பெறுப்பேற்று கொண்டார்.

கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலயங்களின் தமிழ் பாட உதவிக்கல்வி பணிப்பாளராக கடந்த பல வருடங்களாக கடமையாற்றிவரும் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரியான றியால் அப்பதவிக்கு மேலதிகமாகவே இந்த கோட்டக்கல்வி அதிகாரி பதவியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அர்ப்பணிப்புடன் கடந்த காலங்களில் சேவையாற்றிய முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி நஸ்மியா சனூஸ் விட்ட இடத்திலிருந்து சிறப்பாக செய்யவேண்டிய பொறுப்பு புதிய கோட்டக்கல்வி அதிகாரி ரியாலுக்கு இருப்பதாகவும், கடந்த காலங்களில் அவர் திறமையாக செயற்பட்ட அதிகாரி என்றவகையில் அவர் தன்னுடைய கோட்டத்தை முன்மாதிரியான கோட்டமாக உருவாக்க அர்ப்பணிப்புடன் செயலாற்றுவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் இங்கு ஆசியுரை நிகழ்த்திய கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தனது உரையில் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களினால் மாலை அணிவித்து அழைத்துவரப்பட்ட முன்னாள், இந்நாள் கோட்டக்கல்வி அதிகாரிகளுக்கு கல்முனை வலயக்கல்வி அலுவலக உயர் அதிகாரிகள் தமது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :