கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி தரம் 7 மாணவர்கள் "ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வோம், மகிழ்ச்சிகரமாக வாழ்வோம்" எனும் தொனிப்பொருளில் நிகழ்வொன்றினை ஒழுங்கு செய்திருந்தனர்.
கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் அவர்களின் வழிகாட்டலில் தரம் 7 பகுதித் தலைவர் ஏ.எல்.எம்.ஹக்கீம் தலைமையில் வகுப்பாசிரியர்கள், பாட ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்லூரி முதல்வர் எம்.ஐ.ஜாபிர் பிரதம அதிதியாகவும், வைத்தியர்களான டாக்டர் .ஸனூஸ் காரியப்பர், டாக்டர் ஏ.எல்.பாறூக், டாக்டர்.எம்.என்.எம்.தில்ஸான் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் , பாடசாலையின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் சிறப்புரைகளை வைத்தியர்கள் மிகவும் பயனுள்ள வகையில் மாணவர்களுக்கு முன்வைத்தார்கள்.
ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதின் முக்கியத்துவத்தையும் உடன் உணவுகளை (Fast Food) உட்கொள்வதின் பிரதிகூலங்களும் மாணவர்களுக்கு தெளிவு படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தரம் 7 மாணவர்களுக்கும் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இலைக்கஞ்சி வழங்கப்பட்டதுடன் ஆரோக்கியமான உணவுகளும் பரிமாறப்பட்டது.
0 comments :
Post a Comment