'சிறுவர்களுக்கான பாதுகாப்பு சூழலை உருவாக்குதல்'








எஸ்.எம்.எம்.முர்ஷித்-
'சிறுவர்களுக்கான பாதுகாப்பு சூழலை உருவாக்குதல்' என்ற தொணிப் பொருளில் இலங்கை மெதடிஸ்த திருச்சபை வாழைச்சேனை சேகரத்தினால் கனியேல் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் சிறுவர்களுக்கான பாதுகாப்பு சூழ் நிலையை உருவாக்குவதற்காக அமைதி பேரணி வாழைச்சேனை பிரதசத்தில் நடைபெற்றது.

பேரணியில் கலந்து கொண்டோர் 'அன்பான தாய்மார்களே பிள்ளைகளை தவீர்க்க விட்டு வெளிநாடு செல்லாதீர்கள்.' 'என்னை விட்டு போகாதே அம்மா.' 'எங்களது பாதுகாப்பு உங்களது கைகளில்' என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு ஊர்வலமாக நடந்து சென்றனர்.

அமைதிப் பேரணியானது வாழைச்சேனை சுற்றுவளைவு மையப் பகுதியில் இருந்து ஆரம்பமாகி பிரதான வீதி வழியாக பேத்தாழை முருகன் ஆலயம் மற்றும் பேத்தழை விபுலானந்த கல்லூரியை அடைந்து அங்கு மாணவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு வீதி நாடகத்தினை நடாத்திய பின்னர் அங்கிருந்து மருதநகர் மெதடிஸ்த்த திருச்சபையினை சென்றடைந்தனர்.

தாய்மார்கள் சிறு பிள்ளைகளை கைவிட்டு வெளிநாடு செல்வதனால் உள ரீதியாக பாதிக்கபடவதனை தவிர்க்கும் முகமாக இவ் அமைதிப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வில் அருட்திரு வே.உதயகுமார் ஊழியம் இலங்கோவன், கனியேல் சிறியோர் அபிவிருத்தி திட்ட நிருவாகிகள் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :