தெற்கு அவுஸ்திரேலிய PWC நிறுவன பிரதிநிதியாக அக்கரைப்பற்று பட்டயக் கணக்காளர் றொஸ்லின் அஹமட் நிஸார் நியமனம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ங்கிலாந்தின் பட்டயக் கணக்காளரும், அவுஸ்திரேலிய பல்கலைக் கழகத்தில் நிதி முகாமைத்துவத்தில் முது நிலை பட்டமும் பெற்றுக் கொண்ட அக்கரைப்பற்றைச் சேர்ந்த றொஸ்லின் அஹமட் நிஸார் 2019 ஆம் ஆண்டு தனது 20வது வயதில் PWC நிறுவனத்தில் நிதித்துறை ஆலோசகராக நியமனம் பெற்றார்.
2021 மே மாதத்தில் இருந்து சிரேஸ்ட நிதித்துறை ஆலோசகராக தரமுயர்த்தப்பட்டார். இவரது திறமையை அடையாளம் கண்ட PWC நிறுவனம் இவரை இந்த நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவிற்கு சிபார்சு செய்தது.

அவுஸ்திரேலியா முழுவதும் PWC நிறுவனத்தில் பணிபுரிகின்ற 10,000 பேர் கொண்ட அணியில் 10 பேர் மட்டுமே இதற்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

இதில் றொஸ்லி அஹமட் நிஸார் தெற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தில் தனிப் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டு சிட்னி மகாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை பெற்றுக் கொண்டார்.

மிக விரைவில் தெற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தில் PWC நிறுவனத்தின் முகாமையாளர்களுள் ஒருவராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

PWC நிறுவனம் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவை தலைமையகமாகக் கொண்டு 150 இற்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகளை கொண்டுள்ளது. இது உலகின் முதற்தர நிதி நிறுவனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவர் அக்கரைப்பற்று அஸ் ஸிராஜ் மகா வித்தியாலய பழைய மாணவரும், அக்கரைப்பற்று நூராணியா பள்ளிவாசலில் மார்க்க கல்வி பயின்று திருக் குர் ஆனின் பெரும் பகுதியை மனனம் செய்தவருமாவார்.

றொஸ்லி அஹமட் நிஸார் , சாய்ந்தமருதை பிறப்பிடமாகவும் அக்கரைப்பற்றை வதிவிடமாகவும் கொண்ட அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றும் றஸீட் ஏ நிஸார், றிஸானா தம்பதிகளின் புதல்வருமாகும்.
இவரால் இலங்கை திருநாடும், கல்முனை , அக்கரைப்பற்று பிரதேசமும் பெருமை கொள்வதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :