ஆரம்ப நிலையிலுள்ள வணிகங்களை பெரியளவிலான மற்றும் நிலைபேறான நிறுவனங்களாக வளர்ச்சியடைவதற்கு உதவி செய்யும் எட்டு மாதகால நிகழ்ச்சித்திட்டத்தின் நிறைவாக இந்த Demo Day அமைந்தது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கங்களிலிருந்து மீண்டெழுவதற்காக இலங்கையில் காணப்படும் விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றுடன் தொடர்புடைய வாழ்வாதாரங்கள் கொண்டுள்ள மீண்டெழும் தன்மையினை அதிகரிக்கக்கூடிய அளவிற்கு அவற்றை வளர்ச்சியடையச் செய்வதில் இந்நிகழ்ச்சித்திட்டம் கவனம் செலுத்தியது. இந்நிகழ்வில் 80இற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள், பங்காளர்கள் மற்றும் ஒத்துழைப்புடன் பணியாற்றுபவர்களின் முன்னிலையில் 10 வணிகங்கள் தமது புத்தாக்கங்களை காட்சிப்படுத்தின.
நேரடியாக ஔிபரப்புச் செய்யப்பட்ட இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட காலநிலை திறனுடைய புத்தாக்கங்களுள், உணவை சிறப்பாகப் பேணிப்பாதுகாப்பதற்கான தயாரிப்புகள், சூரியசக்தியிலிருந்து மின்னேற்றும் கருவிகள், ஆற்றல் திறன் கொண்ட தேயிலை உலர்த்திகள், நகர்ப்புற விவசாய மாதிரிகள் மற்றும் கடற்பாசியினை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் சேதன உரம் ஆகியவை அடங்கும். GLX மற்றும் USAID இன் காலநிலை மாற்றத்திற்கு இசைவாக்கமடையும் செயற்திட்டத்தின் Climate Change Accelerator செயற்பாட்டின் ஊடாக, புத்தாக்கம், வணிகம், காலநிலை மாற்றம், விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்களால் இந்த வணிகங்கள் பயிற்றுவிக்கப்பட்டன.
“எமது உலகம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால்களில் ஒன்று சில சிறந்த வணிக வாய்ப்புகளையும் வழங்குகிறது என்பதை எண்ணுகையில் ஊக்கம் பிறக்கிறது” என நிகழ்வில் உரையாற்றிய அமெரிக்கத் தூதரகப் பிரதிப் பிரதானி டக்ளஸ் சொனெக் கூறினார். “காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இந்த நிறுவனங்கள் வௌிப்படுத்திய தலைமைத்துவம் என்னைப் பெரிதும் கவர்ந்தது.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
காலநிலை மாற்றத்திற்கு இசைவாக்கமடைவதற்காக தொழில்முனைவோரின் புத்தாக்கங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை GLX நிறுவனத்தின் ஸ்தாபக பிரதம நிறைவேற்று அதிகாரி ரந்துல டி சில்வா குறிப்பிட்டார்.
“காலநிலை மாற்றம் என்பது, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், உண்மையில் நடைபெறும் ஒரு விடயமாகும்” என அவர் கூறினார். “உணவுப் பாதுகாப்பு, உயிரினப்பல்வகைமை மற்றும் வாழ்வாதாரங்கள் ஆகியவற்றிற்கான மிக அவசரமான அச்சுறுத்தலாகவும் அது விளங்குகிறது; சுருக்கமாகக் கூறுவதாயின், பூமியில் உயிர்வாழ்க்கைக்கான மிக அவசரமான அச்சுறுத்தலாக காலநிலை மாற்றம் விளங்குகிறது. காலநிலை மாற்றங்களுக்கு இசைவாக்கமடையும் திறனை தொழில்முனைவோருக்கு வழங்கும் வகையில் இந்நிகழ்ச்சித்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்காரணமாக அவ்வாறான மாற்றங்களுக்கு மத்தியிலும் எங்களது சமூகங்களும் சூழற்தொகுதிகளும் மீண்டெழும் தன்மையுடன் நிலைத்து நிற்கக்கூடியதாகவும் செழித்து வளரக்கூடியதாகவும் இருக்கும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.
காட்சிப்படுத்தப்பட்ட 10 வணிகங்கள் மற்றும் அவற்றின் புத்தாக்கங்கள் என்பன பின்வருமாறு:
ஆகியவற்றை உணவுப் பொருட்களைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனமான Food Things உணவுப்பொருட்களை அடுக்குத்தட்டுகளில் வைத்திருக்கக்கூடிய காலஅளவினை அதிகரிக்கக்கூடிய புதிய வெற்றிட முத்திரையிடும் இயந்திரம் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் ஒரு உணவு உலர்த்தியைப் பயன்படுத்துவதற்கான அவர்களின் திட்டம் தொடர்பாக விளக்கமளித்தது;
சுற்றுச்சூழல்-போக்குவரத்து நிறுவனமான Kulumoto கொள்வனவு செய்பவர்களுக்கு பூச்சிய கார்பன் தடத்தீர்வினை வழங்கும் சூரியசக்தியிலிருந்து மின்னேற்றம் செய்யும் ஒரு முன்மாதிரிக் கருவி தொடர்பாக விளக்கமளித்தது. இது மின்னேற்றத்திற்காக மின்சாரத்தில் தங்கியிருக்கும் அவர்களது முந்தைய மாதிரிக்கு மாற்றாக அமைந்திருந்தது.
சிறிய அளவிலான தேயிலைப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் சில விவசாயிகளுடன் இணைந்து வீட்டில் தயாரிக்கப்பட்ட சேதன வனத் தேயிலையினை உற்பத்தி செய்யும் Saruketha Organics நிறுவனமானது அவர்களின் புதிய ஆற்றல் வினைத்திறனுடைய தேயிலை உலர்த்தும் இயந்திரம் தொடர்பாக விளக்கமளித்தது.
நீர்வளர்ப்பினையும் ஒருங்கிணைந்த வெளிப்புற விவசாய முறைகளையும் இணைக்கும் அதன் நகர்ப்புற விவசாய மாதிரி தொடர்பாக Ceylon Green and Aqua நிறுவனம் விளக்கமளித்தது;
Carbon Blueprint நிறுவனமானது, காய்கறிகள் மற்றும் அலங்காரச் செடிகளுக்கு திரவ சேதன உரங்களைத் தயாரிப்பதற்காக விளைச்சல் செய்யப்பட்ட கடற்பாசிகளுக்கு விரிவாக்கப்பட்ட பெறுமதி அதிகரிப்புச் செயன்முறையுடன் இணைத்து தனது புதிய கடற்பாசி வளர்ப்புத் திட்டம் தொடர்பாக விளக்கமளித்தது;
கெப்பு எல நதி மற்றும் அதன் சதுப்புநிலங்களைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் சூழல்-சுற்றுலா வணிகமுயற்சியான Tourmate.lk (Eco Escape- Galle என வர்த்தகக்குறிமாற்றம் செய்யப்பட்ட) நிறுவனமானது, சுற்றுப்பயணங்களை எளிதாக்குவதற்கான கிட்டத்தட்ட பூச்சிய சுற்றுச்சூழல் தடத்தினைக் கொண்ட மின்சார மோட்டார் மூலம் இயங்கும் படகினைப் பயன்படுத்தும் அதன் புதிய வணிக மாதிரி தொடர்பாக விளக்கமளித்தது;
ஒரு கழிவுப்பொருள் குறைப்பு செயன்முறையாக மண்ணைப் பதப்படுத்தும் தனது உயிர்க்-கரி உற்பத்தி வணிகம் தொடர்பாக Inova நிறுவனம் விளக்கமளித்தது;
சுதேச மூலிகைகள், வாசனைத்திரவியங்கள் மற்றும் பூக்களைப் பயன்படுத்தி சுவையூட்டப்பட்ட தேயிலையினை உற்பத்தி செய்யும் தனது வர்த்தகம் தொடர்பாக Therapy Ceylon விளக்கமளித்தது;
ஏற்றுமதி பயிர்களின் தாவரங்கள் மற்றும் விதைகளை உற்பத்தி செய்யும் Iluktenne Plant Nursery நிறுவனமானது, காலநிலை மாற்றம் மற்றும் காடழிப்பு காரணமாக அழிவடையும் அபாயத்தில் உள்ள வனத் தாவரங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக, தாவர நாற்று மேடைகளில் வனத்தாவர நாற்றுகளை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடனான அதன் விரிவாக்கத் திட்டம் தொடர்பாக விளக்கமளித்தது.
காலநிலை மாற்றம் தொடர்பான தாக்கங்களுக்கு சிறப்பாக இசைவாக்கமடைவதற்காக விவசாயிகள் பயன்படுத்தக்கூடிய பொலிடனல் பசுமை இல்லங்கள் மற்றும் ஏனைய காலநிலை-திறன் தொழில்நுட்பங்கள் குறித்து கிராமப்புற விவசாயிகளுக்கு அறிவூட்டும் தனது முயற்சி தொடர்பாக The Raawana Agro Limited விளக்கமளித்தது.
0 comments :
Post a Comment