USF ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு



நூருல் ஹுதா உமர்-
USF ஸ்ரீலங்கா அமைப்பினால் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் அமைப்பின் ஸ்தாபக தலைவருமான அ.கபூர் அன்வரின் நெறிப்படுத்தலில் அமைப்பின் தவிசாளர் ஏ.எம். சஹானின் தலமையில் "சமூக அபிவிருத்தியில் இளைஞர்களின் வகிபாகம்" எனும் தொனிப் பொருளில் ஒரு நாள் செயலமர்வு சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் நேற்று(12) இடம்பெற்றது.

இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணி தேசிய செயற்குழு உறுப்பினரும், அம்பாறை மாவட்ட செயலாளருமான றிஸ்கான் முகம்மட் கலந்து கொண்டதோடு மேலும் அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ. லத்தீப் மற்றும் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி ஏ. ஹமீர் ஆகியோர் கலந்து கொண்டனர் .

இந்நிகழ்வின் வளவாளராக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பாலியல் நோய் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.என்.எம். தில்சான் கலந்து தற்கால இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதனை வெற்றி கொள்வது எவ்வாறு என்பது பற்றி இளைஞர் யுவதிகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் கருத்துக்களை முன் வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :