"சைபர் லோவட பியாபத்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை இணையத்தளங்களை அபிவிருத்தி செய்தல் நோக்காக கொண்டு
இணையதளத்தை செயல்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் சம்பந்தமாக கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் எல்கே டொமைன் ரெஜிஸ்ட்ரியின் அனுசரணையின் கீழ் வெப்காம்ஸ் குளோபல் (பிரைவேட்) லிமிடெட் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு இலவச இணைய தளங்களை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள 1AB, 1B பாடசாலைகளுக்கு இலவச (Domain) வழங்கி பாடசாலைக்கு என்று தனித்துவமான இணைய தளங்களை உருவாக்கி செயற்படுத்துதல், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப ஆசிரியர்கள், மாணவர்கள் இணைய தளங்களை உருவாக்கும் பயிற்சியினை வழங்குவதனை நோக்காக கொண்டு கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டிருப்பு, அக்கரைப்பற்று, கல்முனை, மூதூர்,
மட்டக்களப்பு ஆகிய வலய கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும்
பாடசாலைகளுக்கான இலவச இணைய வசதிகளை பெறுவதற்காக மாணவர்களையும் ஆசிரியர்களையும் பயிற்றுவிப்பதற்கான பயிற்சியுடனான செயலமர்வுகள் ஆகஸ்ட், 08,09,மற்றும் 10 ஆகிய மூன்று தினங்களில் Zoom தொழில்நுட்பத்தின் மூலம் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவிகள் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பாட இணைப்பாளர் மற்றும் ஆசிரியர்கள், தரம் 10,11 (ICT) மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதலாம் நாள் நிகழ்வுகளில் உதவி அதிபர்களான ஏ.எச். நதீரா, எம்.எஸ். மனுனா, இரண்டாம் நாள் செயலமர்வில் பிரதி அதிபர் ஹாஜியானி எஸ்.எஸ்.எம். சமதா மசூது லெவ்வை, இறுதி நாள் கல்லூரியின் அதிபர் யூ.எல்.எம். அமீன் ஆகியோர் மேற்பார்வை செய்து செயலமர்வில் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment