157வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்!



ஐ.எல்.எம் நாஸிம்-

லங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157 வது பொலிஸ் தினத்தினை முன்னிட்டு அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் சம்மாந்துறை சென்னல் கிராமம்1 கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையில் சிரமதான நிகழ்வுகள் இன்று (3) இடம்பெற்றது

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே டி எச் ஜெயலத் தலைமையிலும், சம்மாந்துறை பொலிஸ் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஒ ஜி ஆர். தர்மரத்ன சம்மாந்துறை சென்னல் கிராம 1 கிராம சேவையாளர் ஐ.எல் எம் ஒஜிஸ்கான், ஆகியோரின் நெறிப்படுத்தலிலும் இடம்பெற்ற சிரமதான நிகழ்வில் ஆயுள்வேத வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் எம் எம் றிஸ்கா,சென்னல் கிராம் 1 சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தகர் ஏ.எல் நஸீர்,சென்னல் கிராம 1 சிவில் பாதுகாப்பு குழுத் தலைவர் மற்றும் குழுவினரது பூரண ஒத்துழைப்போடு சம்மாந்துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிரமதானம் செய்யும் பணியில் ஈடுபட்டதோடு மரக்கன்றுகளும் நடப்பட்டன.

சிரமதான நிகழ்வுக்கு ஒத்துழைப்பு


வழங்கிய அனைவருக்கும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச் ஜெயலத் நன்றியினை தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :