கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற 157 வது பொலிஸ் தின நிகழ்வு.



நிப்றாஸ் மன்சூர்-

ல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் 157 வது பொலிஸ் தினத்தினை முன்னிட்டு கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மர நடுகை, துஆ பிராத்தனை, கெளரவிப்பு நிகழ்வு கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நிர்வாக சபையின் தலைவர் டாக்டர் அல் ஹாஜ் S.M.A. அஸீஸ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (3) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி M. றம்ஸீன் பக்கீர் வரவேற்பு உரையினையும், முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நிர்வாக சபையின் தலைவர் டாக்டர் அல் ஹாஜ் S.M.A. அஸீஸ் தலைமை உரையினையும், கல்முனை சமூக பொலிஸ் பிரிவு ஆலோசனைக் குழுவின் செயலாளர் M.I.M. ஜிப்ரி விசேட உரையினையும் நிகழ்த்தியதுடன், நிகழ்வின் பிரதம அதிதி அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் H.A.N.K. தமயந்த விஜேசிறியினால் பிரதம அதிதி உரையும் நிகழ்த்தப்பட்டது.

157 வது பொலிஸ் தின நிகழ்வில் பொலிஸாரின் அர்ப்பணிப்புமிக்க சேவைகளை பாராட்டி பொன்னாடை போர்த்தி கெளரவிக்கும் நிகழ்வும் அன்றைய தினம் நடைபெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வருகைதந்து சிறப்பித்த அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் H.A.N.K. தமயந்த விஜேசிறிக்கு கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நிர்வாக சபையின் தலைவர் டாக்டர் அல் ஹாஜ் S.M.A. அஸீஸ் அவர்களினால் பொன்னாடை போர்த்தி கெளரவிப்பு வழங்கப்பட்டது. கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல். புத்திகவிற்கு அம்பாறை மாவட்ட அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமா அத் உலமா சபையின் தலைவரும் கல்முனை அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத் உலமா சபையின் தலைவருமான மெளலவி அல் ஹாஜ் P.M.A. ஜலீல் பாக்கவி பொன்னாடை போர்த்தி கெளரவிப்பு வழங்கியதுடன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸார் கல்முனை அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத் உலமா சபையின் செயலாளரும் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் பேஷ் இமாம் மெளலவி A.L. நாஸர் மன்பயினால் பொன்னாடை போர்த்தி கெளரவிப்பு வழங்கப்பட்டது.

 அத்துடன் கல்முனை தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி M. றம்ஸீன் பக்கீர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்முனை கிளையின் தலைவர் மெளலவி A.L.M. முர்ஷித் முப்தியினால் பொன்னாடை போர்த்தியும் கெளரவிக்கப்பட்டார். மேலும் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நிருவாக சபையின் தலைவர் டாக்டர் அல் ஹாஜ் S.M.A. அஸீஸ் கல்முனை சமூக பொலிஸ் பிரிவு ஆலோசனைக் குழுவின் செயலாளர் M.I.M. ஜிப்ரியினால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.

157 வது பொலிஸ் தின விஷேட துஆ பிராத்தனை கல்முனை அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத் உலமா சபையின் செயலாளரும் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் பேஷ் இமாம் மெளலவி A.L. நாஸர் மன்பயினால் நிகழ்த்தப்பட்டது. கல்முனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியுமான A.L.A. வாஹித்தினால் நன்றியுரையும் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வின் பிரதம அதிதி அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் H.A.N.K. தமயந்த விஜேசிறி துஆ பிராத்தனையில் கலந்துகொண்ட அரபுக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன் சிநேக பூர்வமாக உரையாடியதுடன், வரலற்று பாரம்பரியமிக்க கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் உள்ளக வடிவமைப்புகளையும் பார்வையிட்டார்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், விஷேட அதிரடிப்படை ,கடற்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், அரச அதிகாரிகள், சமூக பொலிஸ் குழு உறுப்பினர்கள், அரபுக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :