மனித மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் மெற்றோ பொலிட்டன் கல்வி நிறுவனத்துடன் இனைந்து (31.08.2023) அன்று காலை முதல் மாலை வரை தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு திறன் சம்மந்தமான செயலமர்வு மெற்றோ பொலிட்டன் கல்வி நிறுவனத்தின் கல்முனை காரியாலயத்தில் நடைபெற்றது.
மனித மேம்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் எஸ். ஏ. முஹம்மட் அஸ்லம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மெற்றோ பொலிட்டன் கல்வி நிறுவனத்தின் ஸ்தாபக தலைவர் கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்துகொண்டதோடு ,கல்வி நிறுவனத்தின் முகாமையாளர் எஸ். முஹம்மட் சப்னாஸ், கல்வி நிறுவனத்தில் கடமையாற்றும் உதவி முகாமையாளர்கள் மற்றும் மனித மேம்பாட்டு அமைப்பின் பொது முகாமையாளர் டப்லியூ. ஷவ்தப் உசைம் உற்பட உயர்பீட உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றனர்.
மேலும் இச் செயலமர்வில் வளவாளராக கல்வி நிறுவனத்தின் விரிவுரையாளர்களாக கடைமையாற்றும் எ. எம். எம். தாரிக், எஸ். சரிஸ்ஸா, அஹமட் அவர்கள் கலந்து கொண்டு இளைஞர் யுவதிகளுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு திறன் சம்மந்தமாக விரிவுரையாற்றினார்.
0 comments :
Post a Comment