மர்ஹும் எம்.எச்.எம் அஸ்ரப்பின் 23 ஆவது நினைவு தினம்- நபீர் பௌண்டேசன் முன்னெடுப்பு


பாறுக் ஷிஹான்-


ஸ்ரீரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த மர்ஹும் எம்.எச்.எம் அஸ்ரப்பின் 23 ஆவது நினைவு தினம் சனிக்கிழமை (16) சம்மாந்துறையில் அமைந்துள்ள ஈ.சி.எம் நிறுவனத்தில் நடைபெற்றது.

குறித்த நினைவு தினமானது நபீர் பௌண்டேசன் ஸ்தாபகரும் சமூக சேவகருமான பொறியியலாளர் உதுமான்கண்டு நபீர் ஏற்பாட்டில் நடைபெற்றதுடன் கிராஅத் நிகழ்வினை மௌலவி ஏ.சி சுபைர் ஹாமி மேற்கொண்டார்.

வரவேற்புரை சட்டத்தரணி நவாஸ் மேற்கொண்டதுடன் சம்மாந்துறை உலமா சபையின் கண்ணியமிக்க உலமாக்களால் கத்தமுல் குர்ஆன் நிகழ்வு நடைபெற்றது.

அத்துடன் சிறப்புரையை சம்மாந்துறை ஜெலில் மௌலவி மேற்கொண்டதுடன் பிரதான உரையினை சபா முஹம்மது நஜாஹியும் வழங்கினார்.

தொடர்ந்து நன்றியுரையினை ஆசிரியர் ஏ.எல்.நயீம் மேற்கொண்டார்.நிகழ்வின் இறுதியாக மூன்று மௌலவிமார்கள் கௌரவிப்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சம்மாந்துறை மைந்தன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ அன்வர் இஸ்மாயில் மறைந்து 16 வருடங்கள் நிறைவடைவதை தொடர்ந்தும் அங்கு கத்தமுல் குர்ஆன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :