பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான முகாம்.



எம்.ஏ.ஏ.அக்தர்-


பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான முகாமொன்று பாலமுனை அலிகார் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு வழங்குவதற்காக இந்த இந்த இரத்தான முகாம் நடைபெற்றது.

பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் தலைவர் எம்.எம்.ஏ முரீத் தலைமையில் நடைபெற்ற இந்த இரத்தான முகாம் நிகழ்வில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பாளர் டாக்டர் திருமதி அலீமா அப்துர் ரஹ்மான் உட்பட தாதியர்கள், ஊழியர்கள் ,காத்தான்குடி ஆதார வைத்தியசாலை குருதி நன்கொடையாளர் சம்மேளனத்தின் பிரதி நிதிகள், பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது ஆண்களும் பெண்களுமாக மிகவும் ஆர்வத்துடன் இரத்த தானம் செய்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :