மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் 4 மாணவர்கள் மருத்துவ துறைக்கு தெரிவு.


ஏ.எல்.எம்.ஷினாஸ்-

ற்போது வெளியாகியுள்ள உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி, மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியிலிருந்து நான்கு மாணவர்கள் மருத்துவத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் 58 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வெவ்வேறு கற்கை நெறிகளுக்கு தெரிவு செய்யப்படுவார்கள் என பாடசாலையின் அதிபர் எம்.எம்.ஹிர்பகான் தெரிவித்துள்ளார்.

முஹம்மட் மிஹ்லார் மரீன் அஹமட் (3A), முகம்மட் ரஹீம் அப்னான் அர்ஹம் (3A), அஜ்மல்கான் அப்ரின் சின்ஹான் (2AB), நியாஸ்டீன் பாத்திமா சிறீன் (2AB) ஆகிய நான்கு மாணவர்கள் மருத்துவத் துறைக்கு எதிர்பார்க்கப்படுகின்றனர். 

இதேவேளை விஞ்ஞான பிரிவிலிருந்து 27 மாணவர்களும், தொழில்நுட்ப பிரிவில் இருந்து அஜ்மல்கான் அபீப் ஆஸிப் (3A), ஸபருல்லா ஆசிப் இலாஹி ( B2C) உட்பட நான்கு மாணவர்களும், கணித பிரிவிலிருந்து இமாமுதீன் முகம்மட் இஷ்பாஹ் (2BC), அப்துல் காதர் மஹ்பூஷ் அஹமத் (2CA) உட்பட எட்டு மாணவர்களும், வர்த்தக பிரிவிலிருந்து முகம்மட் ஜுபைர் முஹம்மட் (ACA), கலிலுர் ரஹ்மான் அத்தீப் அஹமட் (BSC) ஆகிய இரு மாணவர்களும், கலை பிரிவிலிருந்து அப்துல் அஜீஸ் பாத்திமா அபா(3A), அப்துல் கலீம் ஹிமா ஹஸ்மத் (2AB), முஹம்மட் பாயிஸ் பாத்திமா நுஹா (A2B), முஹம்மட் இஸ்ஹாக் அஸ்ஜா பானு (2AB), அப்துல் றஷீட் தன்சீர் அஹமட் (2AB), முஹம்மட் நசீர் பாத்திமா றிதா (A2B), முஹம்மட் ஸபீக் நிஹாஜ் அஹமட் (2AB), முஹம்மட் முபாரக் பாத்திமா சர்பா (2AB), நஸ்றுதீன் அம்றா (A2B), முஹம்மட் உவைஸ் பாத்திமா மிஹ்றா (ABC) உட்பட 17 மாணவர்களும் என 58 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு நுழைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாடசாலையில் இந்த சிறந்த பெறுபேற்றை பெற்றுக் கொள்வதற்கு முன்னின்று செயற்பட்ட பாடசாலையின் அதிபர் எம்.எம்.ஹிர்பகான், மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலையின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதி தலைவர்கள், ஏனைய ஆசிரியர்கள், பாடசாலையின் அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ குழுவினர், பழைய மாணவர்கள், பாடசாலையின் வளர்ச்சியில் ஒத்துழைப்புக்களை வழங்கி வரும் அபிமானிகள் என அனைவருக்கும் பாடசாலை சமூகம் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :