கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கராட்டே தைக்கொண்டோ சுற்றுப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவர்கள் 6 தங்கம் உட்பட 16 பதக்கங்கள் வென்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு



அஸ்ஹர் இப்றாஹிம்-
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கராட்டே தைக்கொண்டோ சுற்று போட்டியில் கலந்து கொண்ட கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவர்கள் 6 தங்கப்பதக்கங்கள் , 2 வெள்ளிப் பதக்கங்கள், 8 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 16 பதக்கங்களை பெற்று கல்முனை வலயத்திற்கும், கல்லூரிக்கும் பெருமை தேடித்தந்துள்ளனர்.
இப்போட்டி மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி பிரதான மண்டபத்தில் கடந்த சனி,ஞாயிறு தினங்களில் இடம்பெற்றது.

இதில் 20 வயதுக்குற்பட்ட மாணவர்களுக்கான வயதுப் பிரிவில் ஏ.பி.ஏ.ஹமீம் , ஜே.அஹமட் சுரைப் ,எம்.எச்.அபான் அஹமட் ,கே.எம்.அக்தாஸ் ஆகியோர் தங்க பதக்கங்களையும், ஏ.பி.றஸா அஹமட் வெள்ளிப் பதக்கத்தையும், ஏ.கே.எம்.றஹ்மி ,ஜே.எம்.றிஹாஸ்,ஏ.எம்.அப்ஸத் ,என்.எம்.றிபாத் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் ,
18 வயதுக்குற்பட்ட மாணவர்களுக்கான வயதுப் பிரிவில்

எஸ்.வஜாகத் ,ஏ.ஏ.நதீஸ் தங்கப் பதக்கங்களையும் , ஆர்.எம்.அல்தாப்
வெள்ளிப் பதக்கத்தையும் , என்.ஏ.ஸிஹாமாஸ் ,ஏ.எம்.அப்னான், எம்.எம்.அக்ஸாத், என். அயாஸ் அஹமட் ஆகியோர் வெண்கல பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.

இவ் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்து மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிய கல்லூரி முதல்வர் எம்.ஐ.ஜாபிர் அவர்களும், கல்லூரி கல்வி சமூகமும் இவ்வெற்றிகளை பெற்ற மாணவர்களையும், மாணவர்களை பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர் யூ.எல்.எம்.இப்றாஹீம் , விளையாட்டு பொறுப்பாசிரியர் எம்.ஐ.எம்.அமீர், உடற்கல்வி பிரிவு ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :