நூருல் ஹுதா உமர்-
அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாவடிப்பள்ளி கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் கிராம அலுவலர் ஏ.எம். அலியார் தலைமையில் டெங்கு ஒழிப்பு, யானைத் தாக்கங்களினால் ஏற்படுகின்ற சேதங்களை குறைத்தல், இயற்கை அனர்த்தங்களின் எதிர்வு கூறலின் போது முன் ஆயத்தங்களை எவ்வாறு மேற் கொள்வது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது
இதில் வனவிலங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர், காரைதீவு பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியலய பொது சுகாதார பரிசோதர்கள் போன்ற பலரும் வளவாளர்களாக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தினர்.
கிராமிய ஒத்துழைப்புமன்ற உறுப்பினர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகள், முன் பள்ளி ஆசிரியைகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment