அஸ்ஹர் இப்றாஹிம்-
கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற சிறுவர்களுக்கான வலயமட்ட விளையாட்டுப் போட்டிகளில் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலயம் சார்பாக கலந்து கொண்ட தரம் 3 , தரம் 4 ஆண் பெண் கலப்பு அணிகள் இரண்டும் கல்முனை வலயமட்டத்தில் முதலாம் இடங்களைப் பெற்று மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டனர்.
வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்றுவித்த ஆசிரியர்களான
உடற்கல்வி பொறுப்பாசிரியர் எம்.எப்.றிபாஸ் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் என்.எம்.ஏ.ஆபாக் ஆகியோரை பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் உள்ளிட்ட கல்வி சமூகம் பாராட்டி கெளரவித்தது.
0 comments :
Post a Comment